BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா - அந்நிய செலாவணி இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்தச் சூழலில், செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் பின்னணி என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
அமெரிக்காவும் சீனாவும் நெருங்குவது இந்தியாவுக்கு சவாலாக மாறுமா? நிபுணர்கள் பார்வை
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெய்ஜிங்கிற்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற அந்தஸ்துடன் டொனால்ட் டிரம்ப் அங்கு சென்றடைந்துள்ளார்.
லக்னௌ அணியிடம் தோற்ற சிஎஸ்கே - இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன?
இந்தத் தோல்வியின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு இருந்த சூப்பர் கிங்ஸின் வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதனால் அந்த அணியால் அதிகபட்சமாக 16 புள்ளிகளே பெறமுடியும்.
வாகனங்கள், இயந்திரங்களுக்கு உள்ளே தஞ்சம் அடையும் பாம்புகள் - என்ன செய்ய வேண்டும்?
பாம்புகள் வாகனங்களின் உள்ளே, வாஷிங் மிஷின் போன்ற இயந்திரங்களின் உள்ளே தஞ்சம் புகுவது ஏன்? அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
'கருப்பு' விமர்சனம்: சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான படம் எப்படி உள்ளது?
சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு 'கருப்பு' திரைப்படம் வெளியாகியுள்ளது. எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபுவின்' ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். "குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு கண்ணீரோடு ரசிகர்களிடம் ஆர் ஜே பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்" இந்த நிலையில் இன்று (மே 15) தமிழ்நாடு முழுவதும் கருப்பு திரைப்படம் வெளியாகியுள்ளது.
நேரலை, இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
காணொளி, காணொளி: பழைய படங்களில் வரும் இடங்களின் இப்போதைய நிலையை பதிவு செய்யும் இளைஞர், கால அளவு 4,01
"எனக்கு சிறு வயது முதலே காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதில், காலத்தைக் கடந்து பயணிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம்" என்கிறார் கோவூரைச் சேர்ந்த ஜெயகார்த்திக்.
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் - மாத சம்பளம், சலுகைகள் என்ன?
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பேரவைக்கு முதல் முறையாக உறுப்பினர்கள் பலர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாலத்தீவில் 164 அடி ஆழமுள்ள கடல் குகையை ஆராய சென்ற 5 பேருக்கு என்ன நேர்ந்தது?
மாலத்தீவில் குகை ஸ்கூபா டைவிங்கின் போது உயிரிழந்த 5 இத்தாலியர்களில் நான்கு பேர் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் அங்கமாக இருந்தனர்
'இந்திய கப்பலுக்கு அருகே அமெரிக்க போர்க்கப்பல் இருந்தது' - ஹோர்மூஸில் தாக்குதல் எந்த சூழலில் நடந்தது?
சமீபத்தில் ஹோர்மூஸ் நீரிணையில் இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு மாலுமி உயிர் இழந்துள்ளார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கப்பல் மீது எந்த சூழலில் தாக்குதல் நடந்தது?
டெல்லியில் இரான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்கள் மோதல் ஏன்? முழு பின்னணி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, தனது நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை (மே 15) குற்றம் சாட்டினார். என்ன நடந்தது-
'நாங்கள் செய்த தவறு என்ன?': மாதக்கணக்கில் தயாராகி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் குழப்பம்
இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் உள்ள 31 மையங்களில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பல லட்ச மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
மு.க.ஸ்டாலின் தோல்வி: திமுகவின் பின்னடைவுக்கு காரணமான 5 விஷயங்கள்
சுமார் 77 ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணம் என்ன?
விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி?
திரை நாயகன் விஜய் தமிழக அரசியல் நாயகனானது எப்படி?
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது. விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன? விஜய் சினிமா, அரசியல் இரண்டிலும் தனி பாணியை கடைபிடித்து வென்றது எப்படி?
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு கள யதார்த்தத்தை பிரதிபலித்த கட்சியினரின் மாறுபட்ட உணர்வுகள்
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது பல்வேறு கட்சி அலுவலகங்களில் நிலவிய சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்...
மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி - முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார். மமதாவின் வலது கரமாக கருதப்பட்ட இவர், பாஜகவில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் மாநிலத்தில் அக்கட்சியை அரியணையில் ஏற்றியது எப்படி?
பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்
தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
2050ல் காவிரியில் நீரோட்டம் குறையும் என்று எச்சரிக்கும் புதிய ஆய்வு - எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
காந்திநகர் ஐஐடி (IIT) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் படி, காவேரி ஆற்றின் நீரோட்டம் 2026- 2050-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 3.5% அளவுக்கு குறையக்கூடும். இதனால், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
'வருவாய் பகிர்வு' முறையில் சம்பளம் பெறக்கோரும் தயாரிப்பாளர்கள் - நடிகர் சங்கம் கூறும் பதில் என்ன?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் நடிகர்களுக்கு 'வருவாய் பகிர்வு முறை'யில் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாகத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது எப்படி தெரியுமா?
கோடையில் சில நேரங்களில் ஏசி வெடிப்பது ஏன்? - இதனைத் தவிர்க்க உதவும் 5 தீர்வுகள்
புவி வெப்பமடைதலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பமாகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நகரங்களில் இப்போது முன்பை விட அதிகமாக ஏசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































