காணொளி: ஜப்பானில் பௌத்த போதனைகளை வழங்கும் ஏஐ ரோபோ
காணொளி: ஜப்பானில் பௌத்த போதனைகளை வழங்கும் ஏஐ ரோபோ
ஜப்பானில் மதகுருமார்கள் வயதாவதை எதிர்கொள்ள பௌத்த ஏஐ ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கியோட்டோ பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட "புத்தராய்ட்" ரோபோ பௌத்த வேதங்களில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ மனிதர்கள் பிற மனிதர்களிடம் கேட்கத் தயங்கும் உணர்ச்சிகரமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபாவைச் சுற்றி நெறிமுறை சார்ந்த விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜப்பானின் மக்கள்தொகை குறைந்து வருவதோடு வயதடைந்து வருவதையும் கருத்தில் கொண்டால், இந்த ரோபோக்களால் சில பணிகளையும் கையாள முடியும் என கியோட்டோ பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



