காணொளி: சமையல் எரிவாயு தட்டுப்பாடு - இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
மத்திய கிழக்கில் நடந்துவரும் இரான் போரின் தாக்கம் இந்திய சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ஹோட்டல் போன்ற வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக கூறி மும்பை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் கணிசமான எண்ணிக்கையில் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை நெறிப்படுத்தும் விதமாக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ஐ இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நடந்துவரும் போர் இந்தியாவின் எரிபொருள் நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது எப்படி? இதனை சமாளிக்க முடியுமா? இந்த காணொளியில் விரிவாக காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



