காணொளி: சேஸிங், முதல் பேட்டிங் என இரண்டிலும் சாதித்த சாம்சன்

காணொளிக் குறிப்பு, சச்சின், கோலி, ரோஹித் மாதிரி சாம்சன் செய்த ஒரு விஷயம்
காணொளி: சேஸிங், முதல் பேட்டிங் என இரண்டிலும் சாதித்த சாம்சன்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் மூன்று நாக்-அவுட் போட்டிகளிலும் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்துள்ளார். இதில் இரண்டு சேஸிங்கில் மட்டுமல்லாது, ஸ்கோர் செட் செய்வதிலும் சீராக விளையாடி வருகிறார் சஞ்சு சாம்சன்.

ஒரு உலகக் கோப்பையின் காலிறுதி போன்ற போட்டியில், அரையிறுதியில், இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்திருக்கிறார். சஞ்சு சாம்சன் தன் கிரிக்கெட் கரியரின் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

அவருடைய ஆட்டத்தில் ஒருசில கட்டத்தில் எனக்கு விராட் கோலியின் சாயல் தென்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு வேறு எதுவுமே தோன்றவில்லை. 'யாரால் இதை முடித்துக் கொடுக்க முடியும்?' என்று அப்போது யோசிக்கையில் கோலியின் பெயர் தான் முதலில் தோன்றியது. அவர் இல்லாதபோது யார் அதைச் செய்வது? இப்படி கேள்வி எழுந்த போதுதான் 'நான் அதைச் செய்து தருகிறேன்' என்று சாம்சன் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முழு விவரம் காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு