ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை அணி மோதலுடன் செப்டம்பரில் போட்டி - அட்டவணை இதோ

பட மூலாதாரம், IPL 2021
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள VIVO ஐபிஎல் 2021 போட்டிக்கான மீதமுள்ள அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியின் 14ஆவது சீசன் இந்த ஆண்டு மே மாதம் தள்ளிவைக்கப்பட்டது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.
பிளாக்பஸ்டர் அணிகள்
இந்த நிலையில், சில மாத இடைவெளிக்குப் பிறகு தொடரும் முதலாவது போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதும் என்று பிசிசிஐ அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணைப்படி 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும் 8 ஆட்டங்கள் அபு தாபியிலும் நடைபெறும்.
ஐபிஎல் 2021 லீக் போட்டிகளின் இறுதி ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் டெல்லி கேப்பிடல்ஸுக்கும் இடையே அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும்.
ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதி துபாயிலும், எலிமினேஷன் போட்டி அக்டோபர் 11ஆம் தேதியும், குவாலிஃபயர் போட்டி அக்டோபர் 13ஆம் தேதி ஷார்ஜாவிலும் நடைபெறும்.
அவற்றைத் தொடர்ந்து இறுதிப் போட்டி அக்டோபர் 15ம் தேதி துபாயில் நடத்த ஐபிஎல் குழு திட்டமிட்டுள்ளது.
அட்டவணை முழு விவரம்:

பட மூலாதாரம், IPL 2021
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான் நகரங்களை நோக்கி முன்னேறும் தாலிபன்கள்: ஊரடங்கு போட்ட அரசாங்கம்
- தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்? நிறப்பாகுபாடு காட்டுகிறார்களா?
- இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார்
- 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்: நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்
- நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம்: தோழி பலி
- உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமி கொலையா? சம்பவத்தின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












