சுரேஷ் ரெய்னா: "நானும் பிராமணன் தான்" - நேரலையில் ஜாதியை அடையாளப்படுத்தியதால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வருணனை நேரலையின்போது "நானும் பிராமணன் தான்" என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் சுரேஷ் ரெய்னா பேசிய காணொளியும் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை நடந்த துவக்க ஆட்டத்தின்போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா வருணனையில் சேர அழைக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய ப்ரீமியர் லீக் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.
அப்போது போட்டி வருணனையாளர், சுரேஷ் ரெய்னாவிடம் தென்னிந்திய கலாசாரத்தை எப்படி தழுவுகிறீர்கள் என்று கேட்டார். அவர் வேட்டி, நடனம், விசில் அடிப்பது போன்ற கலாசாரத்தை கடைப்பிடிப்பதை பார்ப்பதால் இந்த கேள்வி எழுப்பப்படுவதாக வருணனையாளர் கூறினார். காரணம், சிஎஸ்கே அணியின் முழக்கமே "விசில் போடு" என்ற வாசகம்தான்.
இதைத்தொடர்ந்து பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் நினைக்கிறேன். நானும் பிராமணன்தான். சென்னையில் 2004இல் இருந்து ஆடுகிறேன். இந்த கலாசாரத்தை நேசிக்கிறேன். எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன். அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (எல். பாலாஜி) ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். இங்கிருந்து கற்பதற்கு சில விஷயங்கள் உள்ளன. நமக்கு சிறந்த நிர்வாகம் உள்ளது. நம்மை ஆழமாக பரிசோதித்துக் கொள்ளும் உரிமை நமக்கிருக்கிறது. சென்னை கலாசாரத்தை விரும்புகிறேன். சிஎஸ்கே அணியில் இருப்பது எனது அதிர்ஷ்டம். அங்கு மேலும் ஆட்டங்களில் பங்கெடுப்பேன் என நம்புகிறேன்," என்று கூறினார்.
ஆனால், சுரேஷ் ரெய்னா, தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசிய வார்த்தைகள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இது தொடர்பான காணொளியை பகிர்ந்த பலரும், "சுரேஷ் ரெய்னா, இப்படி பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். சென்னை அணிக்காக நீங்கள் விளையாடியிருக்கலாம். ஆனால் சென்னை கலாசாரத்தை உண்மையில் நீங்கள் அனுபவித்திருக்கவே மாட்டீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
34 வயதாகும் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேசத்தின் முராத்நகரில் பிறந்தார். 2002ஆம் ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் 2005 முதல் தேசிய மற்றும் சர்வதேச ஆட்டத்திலும் பங்கெடுத்தார். அப்போது தனது 19ஆவது வயதில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தடம் பதித்த ரெய்னா, டெஸ்ட் போட்டியில் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் விளையாடி சதம் அடித்தார். 2011ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த இவர், இந்திய அணி கேப்டனாகவும் இருந்திருக்கிறார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













