ஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா வெளியேற்றம் - தொடரும் விமர்சனங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2020 போட்டி தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியேறியது குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களாக இந்தியாவுக்கு திரும்புவதாகவும், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனவும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் CEO கே.எஸ்.விஸ்வநாதன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி, சுரேஷ் ரெய்னா மற்றும் அவரின் குடும்பத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாபில் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகவும் அதனால் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சுரேஷ்னா ரெய்னா தோனிக்கு கொடுத்த அறை போன்று தனக்கும் அறை ஒதுக்காத காரணத்தால்தான் ஐபிஎல் போட்டி தொடரிலிருந்து விலகினார் என இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஸ்ரீனிவாசனின் கருத்து
இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவில் வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், சென்னை சூப்பர் கிங்கஸின் உரிமையாளர் ஸ்ரீநினிவாசன் அவுட்லுக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சுரேஷ் ரெய்னா குறித்து பேசியிருப்பது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
"இந்த ஐபிஎல் தொடர் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் ரெய்னா, தான் எதை இழந்துள்ளோம் என்பதை நிச்சயம் உணருவார்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஆனால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவது தொடர்பாக சுரேஷ் ரெய்னா தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சமீபத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த சிறுது நேரத்தில் தானும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக ரெய்னா அறிவித்திருந்தார்.
காரணம் எதுவாக இருந்தாலும், சுரெஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு விளையாடாமல் போனது பெரிய இழப்புதான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சூப்பர் கிங்க்ஸ் அணியினருக்கு கொரோனா தொற்று
கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, IPL தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த 21 ஆம் தேதி தனி விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு துபைக்கு வந்ததால் அந்த நாட்டு கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அவர்கள் ஒரு வார காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீங்கலாக மற்ற ஐபிஎல் அணிகள் ஒரு வார தனிமைப்படுத்தல் நடைமுறையை முடித்துக் கொண்டு பயிற்சியை தொடங்கியுள்ளன.
ஆனால், சிஎஸ்கே அணி மட்டும் செப்டம்பர் 1ஆம் தேதிவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நீட்டித்துக் கொண்டது. இது தொடர்பான சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டன.
இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்தான் சூப்பர் கிங்க்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்:
- கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












