சுரேஷ் ரெய்னா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள தகவலில், " உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன், நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்," என குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Instagram
இடது கை பேட்ஸ்மேனான 33 வயது நிறைந்த ரெய்னா கடந்த 2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். பின்னர் 2006ம் ஆண்டில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் விளையாட தொடங்கினார்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
- இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசமாக செல்வேனா? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- இஸ்ரேல் - பாலத்தீனம்: என்ன பிரச்சனை? - 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








