இந்திய சுதந்திர போராட்டம்: ரகசிய வானொலி நிலையம் நடத்திய உஷா மேத்தா

உஷா மேத்தா

பட மூலாதாரம், ‘Freedom Fighters remember’

    • எழுதியவர், பார்த் பாண்டியா மற்றும் ரவி பர்மார்
    • பதவி, பிபிசி குஜராதி

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி. பாம்பே (இப்போது மும்பை) கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

"நான் இன்று உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் 'செய் அல்லது செத்து மடி'" என்று கூறினார் காந்தி.

அதோடு அனைவரையும் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் சேருமாறு கோரினார்.

மகாத்மா காந்தியின் இந்த பேச்சை கேட்ட இளம் மாணவியான உஷா மேத்தா, இதனை தன் மனதில் பதிந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்.

'குஜராத்தி பெண்ணின் ரகசிய வானொலி நிலையம்'

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து மகாத்மா காந்தி மற்றும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. முக்கிய தலைவர்களை கைது செய்வதன் மூலம் அந்த இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.

ஆனால் அந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்த சுதந்திர போராட்ட வீரர்கள் ஏற்கனவே பின்னணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அந்த செயல்பாட்டில் ஒன்றுதான் "ரகசிய வானொலி நிலையம்". வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு உருவம் கொடுக்க இந்த ரேடியோ முக்கியமானதாக இருந்தது.

உஷா மேத்தாவின் கதையிலும் வரலாற்றுப் புத்தகங்களிலும் இது 'காங்கிரஸ் ரேடியோ' என்று அழைக்கப்படுகிறது.

குஜராத்தில் 1920 ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி பிறந்தார் உஷா மேத்தா. சூரத் மாவட்டத்தில் சரஸ் என்ற கிராமத்தில் அவர் பிறந்ததாக சீதா ஒசா என்பவர் எழுதிய 'Homage to Usha Mehta' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உஷா மேத்தா

பட மூலாதாரம், Kalpit Bhachech

உஷா மேத்தாவின் தந்தை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு 1933 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

பிரிட்டிஷாரின் ஆட்சியில் அவர் நீதிபதியாக இருந்ததால் தனது மகள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்த விஷயம் உஷாவை நிறுத்தவில்லை. இளம் வயதிலேயே பல மறியல்கள் ஊர்வலங்கள் மற்றும் காதி நூற்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் உஷா மேத்தா ஈடுபட்டார் என நவீன் ஜோஷி எழுதிய 'Freedom Fighter Remember' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியை கண்டித்து துண்டுப் பிரசாரங்களை விநியோகிப்பது தடை உத்தரவுகளை மீறி உப்பு தயாரித்து விற்பது ஆகியவை உஷா மேத்தாவின் கடமைகளாக இருந்தன.

உஷா மேத்தா படம் எடுத்த நேர்காணல் குறித்து ஜோதி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அந்த நேர்காணலில் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட ஞாபகங்கள் குறித்து உஷா மேத்தா கூறியிருப்பார்.

"1928ஆம் ஆண்டு. எனக்கு அப்போது 8 வயது இருக்கும். பிரிட்டிஷாரை கண்டித்து நான் எழுப்பிய முதல் கோஷம் 'திரும்பிப் போ சைமன்',"

தன்னுடைய உறவினர்களும் சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் இருந்து வந்ததால் தானும் அதில் பங்குபெற வேண்டும் என்ற உந்துதல் இருந்ததாக உஷா மேத்தா கூறினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாம்பேயில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், மௌலானா ஆசாத் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் உரையாற்றியபோது அங்கு உஷாவும் இருந்தார்.

அந்த உரைகளைக் கேட்ட 22 வயதான உஷா மேத்தா தன்னுடன் வேலை பார்த்த சிலருடன் சேர்ந்து ரகசிய வானொலி நிலையம் ஒன்றை தொடங்க மிகுந்த ஈடுபாடு காட்டி அதற்கான வேலைகளையும் தொடங்கினார்.

'Untold story of broadcasting during Quit India Movement' என்ற புத்தகத்தின் படி 20 வயதான சுதந்திர போராட்ட வீரர் விட்டல்தாஸ் கக்கர், 23 வயதான சந்திரகாந்த் ஜவேரி, ஜெகநாத் தாக்கூர், நரிமன் பிரின்டர் என்ற 40 வயது பொறியாளர் ஒருவர் மற்றும் அவரது உதவியாளர் மிர்சா ஆகியோர் இந்த ரகசிய வானொலி நிலையம் தொடங்குவதில் ஈடுபட்டிருந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கமாக இந்த ரேடியோ மாறியது. சுதந்திரப் போராட்டங்கள் குறித்த செய்தி ஒலிபரப்பவும் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்கள் அணிதிரள இந்த ரகசிய வானொலி நிலையம் உதவியது.

"பத்திரிக்கைகள் மற்றும் செய்திகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இந்த டிரான்ஸ்மிட்டர் மூலம் உலகின் மூலை முடுக்கில் இருந்த மக்களுக்கு நாட்டின் நிலவரம் குறித்து செய்திகளைச் சொல்ல உதவியாக இருந்தது"

அந்த காலத்தில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு பண உதவி பெறுவது முக்கிய பிரச்சினையாக இருந்தது. மேத்தாவும் அவருடைய குழுவும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டனர்.

இதுதொடர்பாக ஒரு பேட்டியில் பேசியிருந்த உஷா மேத்தா, "எங்கள் உறவினர்கள் சிலர் அவர்களது நகையை கொடுக்க முன்வந்தனர். எனினும் எங்களுக்கு அதனை பெற தயக்கமாக இருந்தது" என்று கூறியிருந்தார்.

அந்த இடத்தில் இதேபோன்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்த மற்ற குழுக்கள் பற்றி மேத்தாவுக்கு தெரியவந்தது.

உஷா மேத்தா

பட மூலாதாரம், Mani Bhavan Gandhi Sangrahalaya

அதில் ஒரு குழு முக்கிய காங்கிரஸ் நபரும் ஜவாஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பருமான ராம் மனோகர் லோகியா உடையது.

வானொலி நிலையத்தை தொடங்குவதற்கு முன்பு உஷா மேத்தாவுக்கு ராம் மனோகர் லோகியா விடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. இந்த வானொலி நிலையத்தை தொடங்கியதில் லோகியாவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

தங்களிடம் இருந்த பணத்தை ஒன்றுதிரட்டி ரகசிய வானொலி நிலையத்திற்காக ஒரு டிரான்ஸ்மிட்டர் செய்து தரும்படி நண்பர் ஒருவரிடம் அவர்கள் கேட்டனர். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி அந்த டிரான்ஸ்மிட்டர் தயாரானது.

"1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி நாங்கள் எங்கள் ஒளிபரப்பைத் துவக்கினோம்" பிஐபிக்கு அளித்த பேட்டி ஒன்றில் உஷா மேத்தா தெரிவித்திருந்தார்

ரகசிய வானொலி நிலையம் செயல்பட்டது எப்படி

"இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது 42.34m. இது காங்கிரஸ் ரேடியோ"

இப்படியாகத்தான் அந்த வானொலி ஒளிபரப்பு தொடங்கியது.

மும்பையில் உள்ள செளபாட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் தான் இந்த டிரான்ஸ்மிஷன் சென்டர் செயல்பட்டதாக 'The Quit India Movement' புத்தகத்தில் எழுத்தாளர் அருண் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

'Chicago and telephone Co' என்ற நிறுவனத்தால் இதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது.

உஷா மேத்தா

பட மூலாதாரம், Mani Bhavan Gandhi Sangrahalaya

"யாருக்கும் தெரியாமல் ஒரு பின்னணி செயல்பாடாகதான் இந்த வானொலி நிலையத்தை நடத்தினோம். காவல்துறையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நாங்கள் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தோம்" என உஷா மேத்தா பிஐபிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"மூன்று மாதங்கள் தொடர்ந்து நாங்கள் செய்திகளை ஒலிபரப்பினோம். அந்த நேரத்தில் ஆறிலிருந்து 7 இடங்களுக்கு நாங்கள் மாறினோம்."

ஆரம்ப காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நாளுக்கு இருமுறை செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் ஒரே ஒருமுறை இரவு 7 மணியிலிருந்து எட்டு மணி வரை செய்திகள் ஒலிபரப்பாகின.

"சிறப்பு செய்திகள்"

"இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு செய்திகள் பலரிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. மேலும் அப்போது பாம்பேயில் இருந்த அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் இருந்தும் எங்களுக்கு முக்கிய செய்திகள் கிடைக்கும்" என சங்கர் உமா என்பவருக்கு அளித்த பேட்டியில் உஷா மேத்தா கூறியிருந்தார்.

"சிட்டகாங் வெடிகுண்டு சோதனை, ஜாம்ஷெட்பூர் வேலை நிறுத்தம் போன்ற பல செய்திகளை நாங்கள்தான் முதலில் வழங்கினோம்."

"அப்போது இருந்த நிலைமை பற்றி பேச செய்தித்தாள்கள் அஞ்சிய நிலையில், காங்கிரஸ் ரேடியோ மட்டும்தான் என்ன நடந்தது என்பவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ரகசிய வானொலி நிலையம் மூலம் பல முக்கிய தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.

ரகசிய வானொலி நிலையம் பற்றி எப்போது வெளியே தெரியவந்தது?

காங்கிரஸ் ரேடியோ மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

எனினும் அது பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஒன்று பண உதவி.

"மேலும் காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களால் தொடர்ந்து துரத்தப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருந்தது பலமுறை காவல்துறை வாகனம் எங்களை துரத்துவது அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது. நூலிழையில் தப்பித்து வந்தோம்"

ஆனால் இறுதியில் பிரிட்டிஷ் ராஜ்ய காவல்துறையிடம் அவர்கள் பிடிபட்டனர்.

Quit India Movement' புத்தகத்தின்படி 1942ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அவர்கள் பிடிபட்டனர்.

பிடிபட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து உஷா மேத்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

"நாங்கள் பிடிபட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சில முக்கிய வானொலி கடைகளை போலீசார் சோதனை செய்தனர். சிக்காகோ ரேடியோ கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. போலீசாருக்கு துப்புக்கொடுத்த ஒரு தொழில்நுட்ப நபரையும் அவர்கள் கைது செய்தனர்."

பின்னர் நவம்பர் 12ஆம் தேதி பபுபாய் கக்கர் அலுவலகத்திற்கு போலீசார் வந்தபோது அந்த கட்டடத்தில் உஷா மேத்தா ஒலிபரப்பப்பட உள்ள செய்தியோடு இருந்தார்.

"எங்கள் அலுவலகத்திற்கு போலீசார் வந்து தெரிந்தவுடன் காங்கிரஸ் ரேடியோ உடன் சம்பந்தப்பட்ட சில முக்கிய ஆவணங்களையும் இலக்கியங்களையும் அகற்ற முயன்றோம். என மேத்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அங்கிருந்து அடித்துப்பிடித்து உஷா மேத்தா செய்திகள் ஒலிபரப்பு செய்யும் அறைக்கு சென்றார்.

அங்கு லோகியாவுடன் மற்றொரு நபரும் மாலை நிகழ்ச்சிக்காக தயார் செய்து கொண்டிருந்தனர்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

அவர்களிடம் மேத்தா நடந்தவற்றை முழுமையாக கூறினார்.

"ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை ஒலிபரப்பிய பின்னர் சில செய்திகளை வழங்கினோம். எங்கள் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் வந்தே மாதரம் ஒலிபரப்பப்படும் போது கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை உடைத்துக் கொண்டு வந்த போலீசார் வந்தேமாதரம் ஒலிபரப்புவதை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நாங்கள் அதைக் கேட்கவில்லை. பின்னர் ட்ரான்ஸ்மிட்டிங் செட், 120 கிராமபோன் பதிவுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகைப்படங்கள் மற்றும் சில ஒளிநாடாக்கள் அடங்கிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டங்களின் பதிவுகளையும் அவர்கள் கைப்பற்றினர்"

ஒலிபரப்பு நிலையத்தில் இருந்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

உஷா மேத்தா

பட மூலாதாரம், ‘Untold Story of Broadcast during Quit India Move

அடுத்தநாள் விசாரணை தொடங்கியது. இரண்டுமாத விசாரணைக்குப் பிறகு உஷா மேத்தா உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உஷா மேத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் 1946 ஆம் ஆண்டு சிறையிலிருந்து உஷா மேத்தா விடுவிக்கப்பட்டார்.

"நான் சிறையில் இருந்து வெளியே வரும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்ந்தேன். ஏனெனில் 'செய் அல்லது செத்துமடி' என்ற மகாத்மா காந்தியின் செய்தியை பலருக்கு பகிர்ந்த நிம்மதி எனக்கு இருந்தது" என்றார் அவர்.

விடுவிக்கப்பட்ட பிறகு "அரசியல் மற்றும் சமூக சிந்தனை மகாத்மா காந்தி" என்ற தலைப்பில் பிஎச்டி பெற்றார் உஷா மேத்தா.

பின்னர் 30 ஆண்டுகள் பாம்பே பல்கலைக்கழகத்தின் வில்சன் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து அரசியல் துறையின் தலைவராகவும் இருந்தார்.

1998 ஆம் ஆண்டு இந்திய அரசுஅவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உடல்நிலை குன்றிய காரணத்தால் தனது 80 வயதில் அவர் உயிரிழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: