இலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதுளை¸மஹரகம¸ மஹியங்கனை¸ பானந்துரை¸ அகலவத்தை மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளுக்கான வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் பால் நிலை தொடர்பான ஆவண குறைப்பாடே மஹரகம உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்திற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பொறுப்பான அதிகாரியினால் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வெலிகம உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்¸ பதியத்தலாவை மற்றுமு; தெஹியத்தகண்டிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான இலங்கை சுதந்திர கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, அம்பாறை மாவட்டத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்ககப்பட்டுள்ளன.
ஆலையடிவேட்பு மற்றும் சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று உள்ளுராட்சி மன்றத்திற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உரிய காலத்திற்குள் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை¸ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட இரண்டு உள்ளுராட்சி மன்ற வேட்பு மனு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












