"பல்வேறு நிறுவனங்களில் குழந்தை வன்கொடுமை நிகழ்ந்ததுள்ளது"- வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆணையம்

பட மூலாதாரம், Thinkstock
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நடத்தப்பட்ட ஐந்தாண்டு விசாரணை முடிந்து வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையில் 400-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு கழகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை நடந்ததிற்கான ஆதாரங்களை அந்நாட்டு அரசு ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டிலிருந்து, இது தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணைக்காக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து அரசு ஆணையம் கேட்டறிந்ததில், 4000 நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டம் இயற்றுபவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கிய 17 பாகங்கள் கொண்ட இறுதி அறிக்கை வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
"ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். சரியான எண்ணிக்கை நமக்கு தெரியவே வராது" என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
"சமூகத்தின் முக்கிய அமைப்புகள் தீவிரமான தோல்வி அடைந்துள்ளன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத குருக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மீது பொதுவாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
கத்தோலிக்க நிறுவனங்களில் மிக அதிக அளவிலான குழந்தை வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












