நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து தமிழ்:

பட மூலாதாரம், Getty Images
'தி இந்து தமிழ்' நாளிதழில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த செய்தியே பிரதான செய்தியாக இடம்பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே பெர்த்தில் நடக்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் என 'தி சன்'என்ற நாளிதழில் வெளியிடப்பட்ட பரபரப்பு புகார் குறித்த செய்தியும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்த செய்தியும் இந்த நாளிதழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

தினத்தந்தி:
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு தமிழகம் ஒன்றாக எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்துகிறது என்று 'தினத்தந்தி' நாளிதழில் தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.
தினமலர்:

பட மூலாதாரம், Dinamalar
லண்டனில் உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் என்று அவரின் வழக்கறிஞர் வாதிட்டதாக'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பணம் வாங்கி கொண்டு சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சுமத்தியிருப்பதாக வெளியிடப்பட்ட செய்தியும், 'அருவி' திரைப்பட விமர்சனமும் தினமலர் நாளிதழில் வெளியான மற்ற சில முக்கிய செய்திகளில் இடம்பெறுள்ளன.
தினமணி:
சர்வதேச நிபந்தனைகளால் இந்திய வேளாண்துறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும், விவசாய நில பயன்பாடு குறித்த மீள்பார்வை நாட்டில் தேவை என்பதை வலியுறுத்தியும் 'தினமணி' நாளிதழில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மிகப் பெரிய அளவில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இது தொடர்பான பணியில் ஈடுபட்டு வருவதாகவும்'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
கோலாப்பூரில் வீட்டுப்பாடத்தை செய்து முடிக்காத எட்டாம் வாகுக்கு மாணவிக்கு கடுமையான உடற்பயிற்சி தண்டனை அளித்த தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டது குறித்த செய்தி இந்த நாளிதழில் இடம்பெற்றள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












