ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு ரூ. 16 கோடி, தோனிக்கு ரூ. 12 கோடி - மெகா ஏலத்துக்கு முன்பு தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்?

பட மூலாதாரம், AFP
இந்திய ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் அணிகள் சார்பில் தக்க வைக்கப்பட்ட 27 வீரர்களின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு 15ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், எட்டு அணிகள் சார்பில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. அதிகபட்சமாக ரூ. 90 கோடிவரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்ற நிலையில், தற்போது சில வீரர்களை விதிகளின்டி எட்டு அணிகள் தக்க வைத்துள்ளன. அதன் விவரம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா ரூ. 16 கோடி, எம்..எஸ். தோனி ரூ. 12 கோடி, மொயீன் அலி ரூ. 8 கோடி, ருத்துராஜ் கெய்க்வாட் ரூ. 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஐபிஎல் 2021 போட்டியில் தோனி பேட்டிங் திறனை சரியாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும் அவர் இன்னும் கிரிக்கெட் உலகில் சூழ்நிலைகளை சரியாகக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா பல சந்தர்ப்பங்களில் பேட்டிங் மற்றும் பெளலிங் திறனை வெளிப்படுத்தி மஞ்சள் ராணுவம் என அழைக்கப்படும் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கிறார்.
இதில் ரவீந்திர ஜடேஜாவை அதிக விலைக்கு தக்க வைத்திருப்பதன் மூலம், அவரது தலைமையை தோனி ஊக்கவித்தபடி தமது அணிக்கு வழிகாட்டியாகவோ பின்புலமாகவோ செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் விராட் கோலி ரூ. 15 கோடி, கிளென் மேக்ஸ்வெல் ரூ. 11 கோடி, மொகம்மது சிராஜ் ரூ. 7 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோஹித் சர்மா ரூ. 16 கோடி, ஜஸ்பிரித் பும்ரா ரூ. 12 கோடி, சூர்யகுமார் யாதவ் ரூ. 8 கோடி, கீரோன் பொல்லார்ட் ரூ. 6 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் ரூ. 14 கோடி, அப்துல் சமாத் ரூ. 4 கோடி, உம்ரான் மாலிக் ரூ. 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை ரூ. 14 கோடி, ஜோஸ் பட்லரை ரூ. 10 கோடி, யாஷவி ஜெய்ஸ்வாலை ரூ. 4 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல் ரவுண்டர்களான ஆண்ட்ரே ரஸ்ஸெலை ரூ. 12 கோடி, வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடி, வெங்கடேஷ் ஐயரை ரூ. 8 கோடி, சுனில் நரைனை ரூ. 6 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பந்த்தை ரூ. 16 கோடி, அக்சார் படேலை ரூ. 9 கோடி, பிரித்வி ஷாவை ரூ. 7.50 கோடி, அன்ரிச் நோர்ட்ஜேவை ரூ. 6.50 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை ரூ. 12 கோடி, அர்ஷ்தீப் சிங்கை ரூ. 4 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
இந்த போட்டி விதிகளின்படி ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்கள, இரண்டு வெளிநாட்டு வீரர்கள், இரண்டு அன்கேப்ட் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில், சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது. ராஜ்ஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை தலா 3 வீரர்களையும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு வீரர்களையும் தக்க வைத்துள்ளது. இந்த 27 வீரர்களில் எட்டு பேர் வெளிநாட்டினர். நான்கு பேர் அன்கேப்ட் வீரர்கள்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்