வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?

வைக்கிங்

பட மூலாதாரம், JORVIK VIKING CENTRE, YORK

    • எழுதியவர், டாம் டி காஸ்டல்லா
    • பதவி, பிபிசி

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டு வந்தது. அந்த வரிசையில், 22வதாக வெளியான இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

வைக்கிங் சமூகதத்தின் பழங்கால கதைகள் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கவர்ந்துள்ளன. ஆனால் உண்மையில் அவர்களைப் பற்றி இந்த உலகம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறதா?

அது ஜூன் 8ஆம் தேதி. நீண்ட கப்பல்கள் லிண்டிஸ்ஃபார்னுக்கு வந்தபோது அங்குள்ள துறவிகளுக்கு அது 793ஆம் ஆண்டு என தெரியாது. ஆனால் அது பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் வைக்கிங் இனத்தின் 300 ஆண்டுகால ரத்தக்களரி தாக்குதல்களின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் யார்க்கின் அல்குயின், "பிரிட்டனில் இப்போது நாம் பேகன் இனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல இதற்கு முன்பு ஒரு பயங்கரவாதம் தோன்றியதில்லை" என்று எழுதியிருந்தார்.

"வெளி ஜாதியினர் துறவிகளின் ரத்தத்தை பலிபீடத்தைச் சுற்றியும் ஊற்றினர், மேலும் வீதியில் சாணத்தை மிதிப்பது போல தேவாலயத்தின் உள்ளே துறவிகளின் சடலங்களை மிதித்தார்கள்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

12ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கிங்குகள் பற்றிய தொகுப்புப் படைப்புகள் இடம்பெற்றன. கற்பனை அளவில் அவை மிகப் பெரிதாக இருந்தன. கொம்புகள் கொண்ட தலைக்கவசத்தில் மூக்கை மூடும் பொன்னிற கவசத்துடன் ஆக்ரோஷத்துடன் இருந்த மக்கள், பாலியல் வல்லுறவு செய்து கொள்ளையடிப்பதற்காக குடியிருப்புகளில் புகுந்தனர் என்று வைக்கிங் இனத்தவர்களின் ஆக்கிரமிப்பு படையெடுப்பு பற்றி புனையப்பட்ட கதைகளில் ஒன்று.

அவை நீண்டகாலமாகவே சவால்களுக்கு உட்படுத்தப்பட்டன.

Short presentational grey line
Short presentational grey line

ஸ்காண்டிநேவிய கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தலைக்கவசத்தில் இருந்து இதை பார்க்கலாம். வைக்கிங் இனத்தவர் ஒருபோதும் அவற்றை அணிந்ததில்லை. அவை 19ஆம் நூற்றாண்டிலிருந்து சித்தரிப்புகளில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்னர் தனது ஓபரா டை வால்குரே (தி வால்கெய்ரி) படைப்பில் நார்ஸ் புராணத்தை கொண்டாடினார். 1876இல் நடந்த முதல் பெய்ரூட் திருவிழாவில் அவரது ரிங் சைக்கிளின் செயல்திறனுக்காக கொம்புகள் கொண்ட தலைக்கவசங்கள் உருவாக்கப்பட்டன.

வைக்கிங் ஆய்வைத் தூண்டிய அருங்காட்சியக படைப்புகள்

கொம்புகள் கொண்ட தலைக்கவச வரலாறு உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்று ஜோர்விக் மையத்தைச் சேர்ந்த எம்மா போஸ்ட் கூறுகிறார்,

ஆனால் அது ஒரு வைக்கிங் விஷயம் அல்ல. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஒரு சடங்கு கொம்பு தலைக்கவசம் உள்ளது. இது கி.மு 150-50 காலத்தைச் சேர்ந்தது.

வைக்கிங்ஸ் குடிப்பதற்காக விருந்தில் கொம்புகளைப் பயன்படுத்தினர். தொடர்புகொள்வதற்காக அவற்றை ஊதினார்கள். அவை வைக்கிங் அணிகலன்களில் சித்தரிக்கப்பட்டன. அவை அணியப்படவில்லை. உண்மையில் அது போருக்கு ஒரு பெரிய சுமையாகவே இருந்திருக்கும்,

ஆனால் இன்று ஒரு குழந்தையிடம் வைக்கிங் இனத்தவர்களை வரையச் சொன்னால் அகு கொம்புகள் கொண்ட தலைக்கவசத்துடனேயே அவர்களை சித்தரிக்கும். அந்த அளவுக்கு ஆழ்மனதில் வைக்கிங் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பது பதியப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது நம் சமூகத்துடன் மிகவும் உட்பொதிந்துள்ளது, அதை நாம் எப்போது அகற்றுவோம் என்று நான் நினைக்கவில்லை.

"ஆனால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 2014இல் நடந்த கண்காட்சி மூலம் வைக்கிங் பற்றிய புதிய தேடுதலுக்கு விடை தேடும் ஆர்வத்தை தூண்டியது. "வைக்கிங்ஸ் சோப் ஓபராக்களை கண்டுபிடித்தனர். உலகமயமாக்கலுக்கு முன்னோடியாக இருந்தனர் - நாம் ஏன் அவர்களை மிருகங்களாக சித்தரிக்கிறோம்?" என்று தலைப்பில் அப்போது நியூ ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டு அவர்களைப் பற்றிய புதிய பார்வையை தூண்டியது.

வைக்கிங்

பட மூலாதாரம், Getty Images

ஒரு டெய்லி டெலிகிராப் விமர்சகர் - "எல்லா வைக்கிங்குகளும் வெளிறிய முகம், வெறி கொண்ட கண்கள் ளுடன், பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டார்கள்" - என்ற வைக்கிங் பற்றி அதுவரை கல்வி ரீதியாக பதிக்கப்பட்ட கற்பனையை புதிய பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நீக்கும் என்று சந்தேகிக்கிறார்.

"கொடூரமான அந்த இனத்தவர்கள் சைவ உணவு உண்பவர்கள் என்பதையும், அவர்கள் அன்றைய சில முன்னணி பல்கலைக்கழகங்களை பராமரித்து வந்தனர். அவர்கள் கொம்புகள் கொண்ட ஹெல்மெட்களை அணியவில்லை என்றே நான் அறிகிறேன்," என்று அந்த விமர்சகர் குறிப்பிடுகிறார்.

தாக்கம் ஏற்படுத்திய வைக்கிங் திரைக்கதைகள்

யார்க் பல்கலைக்கழகத்தில் ஸ்கேண்டிநேவிய வாழ்க்கை முறை பற்றி போதித்து வரும் பேராசிரியர் மேத்யூ டவுன்எண்ட், "வைக்கிங்ஸ் மென்மையானவர்களா இல்லையா என்பது பற்றிய விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது" என்கிறார்.

ஹாலிவுட்டில் 1958இல் வெளிவந்த திரைப்படமான தி வைக்கிங்ஸில் அவர்களைப் பற்றிய உன்னதமான பார்வை வெளிப்படுத்தப்பட்டது. கிர்க் டக்ளஸ், ஜேனட் லீ மற்றும் டோனி கர்டிஸ் ஆகியோர் நடித்த அந்த படம் பற்றிய தனது பார்வையில், "பாலியல் வல்லுறவு, தீ மற்றும் கொள்ளை மற்றும் முழு ரத்தம் தாகம் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்ட படம்" என்று அதை குறிப்பிட்டு விமர்சனத்தை தொடங்குகிறார். குறைந்தபட்சம் அந்த படத்தில் வைக்கிங்குகளுக்கு படைப்பாளிகள் கொம்பு தலைக்கவசத்தை வைத்திருக்கவில்லை என்கிறார் அவர்.

Short presentational grey line
Short presentational grey line

1960கள் மற்றும் 70களில் வைக்கிங்குகளை கொள்ளையடிக்கும் காட்டுமிராண்டிகளாக சித்திரிப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இங்கிலாந்து மீதான வைக்கிங் படையெடுப்பு தொடர்பான பதிவுகளில் பெரும்பாலானவை "பாதிக்கப்பட்டவர்கள்" என கருதப்பட்ட துறவிகளால் எழுதப்பட்டவை என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் பிறகே தொல்பொருள் ஆய்வுகள், ஸ்கேண்டிநேவிய கால கதைகள் பற்றிய எண்ணத்தை மாற்றத் தூண்டின. - பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவை எழுதப்பட்டன - அதுவும் நம்பகமான ஆதாரத்துடன் அவை பதிவுகளாக்கப்பட்டன.

1970களின் பிற்பகுதியில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. யார்க்கின் காப்பர்கேட் பகுதியில் ஒரு வணிக வளாகத்தை கட்டும் போது, ​​வைக்கிங் வீடுகள், உடைகள், நகைகள் மற்றும் ஹெல்மெட் ஆகியவை ஈர நிலத்தில் பூமிக்கடியில் நன்கு புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அது நகரத்தின் ஜோர்விக் மையத்தை உருவாக்க வழிவகுத்தது. வைக்கிங்குகள் உள்நாட்டு, குடும்பம் சார்ந்த மக்களாக ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டனர்.

"காப்பர்கேட் பகுதியில் கிடைத்த கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு வைக்கிங்ஸ் பற்றிய எங்களின் பார்வை மாறியது" என்கிறார் ஜோர்விக் மையத்தின் அப்போதைய தலைவர் கிறிஸ் டக்லி.

2014க்கு முன்பு 1980இல் வைக்கிங் பற்றிய கண்காட்டியொன்றை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நடத்தியது. அப்போது கூட வைக்கிங்குகளை ஒரு கவிஞர்களைப் போல காட்டும் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த காட்சிகள் தற்போதைய ஆய்வாளர்களின் பார்வையை பிரதிபலித்தன. வைக்கிங்குகள் தோல் காலணிகளை அணிந்துகொண்டு தலைமுடியை சீவி வாரியிருந்தனர்.

EVERETT COLLECTION/REX

பட மூலாதாரம், EVERETT COLLECTION/REX

2007இல் டப்ளின் பயணத்தின் போது, 2014இல் ​​டென்மார்க்கின் கலாசார அமைச்சர் ஆக இருந்த பிரையன் மெக்கெல்சன், வைக்கிங்ஸ் பற்றிய சத்திரிப்பிற்காக ஐரிஷ் மக்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்று மறுத்து, டேனிஷ் செய்தித்தாளிடம் கூறினார்: "நான் எனது உரையில், 'மக்களுக்கு நிறைய சேதங்களை அயர்லாந்து ஏற்படுத்தியது', ஆனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கிங் பற்றிய எங்களுடைய உருவகத்துக்காக நாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை," என்று அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்டாரா டென்மார்க் அமைச்சர்?

1,000 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்பது அபத்தமானது. ஆனால் மற்றவர்கள் மெக்கெல்சனின் இரண்டாவது கருத்து பற்றி கேள்வி எழுப்பினர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றாசிரியரான பேராசிரியர் சைமன் கெய்ன்ஸ் கூறுகையில், ""அவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள், விரும்பத்தகாதவர்கள் மற்றும் மிருகத்தனமானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வைக்கிங்ஸ் செய்ததாகப் புகழப்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்தார்கள்."

அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் திருடினார்கள். தேவாலயங்களை சூறையாடினார்கள். புதையல் களஞ்சியங்களாக அந்த தேவாலயங்கள் இருந்தன. வைக்கிங்குகள் கால்நடைகள், பணம் மற்றும் உணவுகளை அபகரித்தனர். அவர்கள் பெண்களையும் கடத்தியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"வைக்கிங்குகள் குடியேற்றங்களை எரித்து, அழிவின் பாதைக்கு வித்திட்டனர்."

Short presentational grey line
Short presentational grey line

இது தூண்டப்படாத ஆக்கிரமிப்பு. மேலும் பெரும்பாலான படைகளைப் போல அல்லாமல், அவர்கள் கடல் வழியாக வந்தனர், அவர்களின் குறுகிய-அடிப்படை நீளமான கப்பல்கள். அவை ஆறுகள் வரை பயணிக்கவும் ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடிச் செல்ல வசதியாக அமைந்தன. இதில் மோசமான செயல்பாடாக, திருடிய இடங்களுக்கே அவர்கள் மீண்டும் வந்து எஞ்சிய பொருட்களை சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இயல்பு மோசமானது.

வைக்கிங்

பட மூலாதாரம், BRITISH MUSEUM

படக்குறிப்பு, டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகம் (தங்க கழுத்து வளையம்) மற்றும் தேசிய அருங்காட்சியகங்கள் ஸ்காட்லாந்து (புரூச்)

வைக்கிங் தலைவர்களில் இவார் தி போன்லெஸ் என்று அழைக்கப்பட்டவர் மிகக் கொடூரமானவர் என்று கூறப்படுகிறது. பழங்கதைகளின்படி, அவர் கிழக்கு ஆங்கிலியாவின் ராஜாவான எட்மண்டை ஒரு மரத்தில் தலைகீழாக தொங்க விட்டார். அவரது தலை வெடிக்கும் வரை அவரது ஆட்களை எட்மண்ட் மீது அம்புகளை எய்தச் செய்தார்.

எலா மன்னரின் கொடூர மரணம்

மேலும் வைக்கிங்கின் எதிரியான மன்னர் எலா, யார்க்கில் அவரது விலா எலும்புகள் முதுகுத்தண்டில் முறிக்கப்பட்டதாகவும், அவரது விலா எலும்புகள் சிறகுகள் போல தோற்றமளிக்கும் வகையில் உடைக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு எலாவின் முதுகில் ஏற்பட்ட காயங்களுக்குள் ஊடுருவி அவரது நுரையீரல் வெளியே எடுக்கப்பட்டு கொல்லப்பட்டது. இந்த நிகழ்வை ரத்தக்கழுகின் தீரா தாகம் என அழைத்தனர்.

ஆனால், இப்படியும் நடந்திருக்குமா என இந்த கதைகளின் துல்லியத்தன்மை எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்திருக்கிறது.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில், வைமவுத்தில் 50 தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, அவை வைக்கிங் இனத்தவர்கள் சிறைப்பிடித்த கைதிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

JORVIK VIKING CENTRE, YORK

பட மூலாதாரம், JORVIK VIKING CENTRE, YORK

வைக்கிங்ஸ் கிட்டத்தட்ட நியூஃபவுண்ட்லேண்ட் வரை சென்றனர். வடக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கும், கிழக்கே இப்போது ரஷ்யா மற்றும் யுக்ரேன் வரை சென்றனர்.

மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் வைக்கிங் இனத்தவர்களின் செல்வாக்கு குறைவாக அறியப்பட்டிருக்கலாம். "அவர்கள் பல விஷயங்களைச் செய்ததால், அனைத்தையும் ஒருசேர மதிப்பிடுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்" என்று கெய்ன்ஸ் கூறுகிறார்.

ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் வைக்கிங் பற்றிய மிகப்பெரிய எழுத்துப்பதிவுகள் அரபு மொழியில் கண்டெடுக்கப்பட்டதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி பேராசிரியர் ஜேம்ஸ் மாண்ட்கோமெரி குறிப்பிடுகிறார்.

வைக்கிங்ஸ், காஸ்பியன் கடலை அடைந்து காசர் பேரரசுடன் தொடர்பு கொண்டனர்.

ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கிடைத்த ஓர் ஆதாரத்தை நம்பினால், அவர்கள் பாக்தாத் வரை சென்றிருக்கலாம் என்று அறிய முடிகிறது.

Short presentational grey line
Short presentational grey line

"ரஸ்" என்று அழைக்கப்படும் வைக்கிங்ஸ் தற்போதைய யுக்ரேனின் கீஃபின் கோட்டை உருவாவதற்கு பங்களித்ததாக கருதப்படுகிறது, என்கிறார் மாண்ட்கோமெரி.

இங்கு கிடைத்த சில ஓவிய படைப்புகள், வைக்கிங்குகளை போர்வீரர்களாக அன்றி, உலகளாவிய வர்த்தகர்கள் போல சிலர் சித்திரிக்க வழிவகுத்தது.

பழங்கால வரலாற்றுப் பதிவுகள் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வில் ஆதாரபூர்வமாக தகவல்கள் வந்தால், அதை வரலாற்றாய்வுச் சமூகம் சரிபார்த்து ஏற்றுக் கொண்டால், அந்த வரலாற்றை திருத்தி எழுதுவது இயல்பான நடவடிக்கை.

அந்த வகையில், கல்வியாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் வைக்கிங் பற்றி எப்போதும் ஒரு புதிய கோணத்தைத் தேடுகிறார்கள். மேலும் சமூக இயல்புகள் உருவாகும்போது மக்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள்.

"நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் மீண்டும் எழுத வேண்டும் என்று ஸ்டெண்டால் கூறினார்" என்று இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆய்வில் ஈடுபடும் வரலாற்றாசிரியர் ஆன்டனி பீவர் கூறுகிறார்.

ஆனால் வரலாற்றின் சில துறைகளில் திருத்தல்வாதமும் எதிர்-திருத்தலவாதமும் அதிகமாக நிகழ்கின்றன - உதாரணமாக முதலாம் உலக போர் - மற்றவற்றை விட அதிகமான சித்திரிப்பை கொண்டதாக இருந்துள்ளது என்கிரார் ஆன்டனி பீவர்.

ஆக்கிரமிப்பில் ஆளுகை நெறி

"தற்கால அரசியல் அதிர்வுகளைக் கொண்ட காலங்கள் மற்றும் கேள்விகள் - உள்நாட்டுப் போர்கள், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவம், உழைப்பு, பெண்களை நடத்துதல் மற்றும் பல அதில் அடங்கும்," என்கிறார் ஆன்டனி பீவர்.

வைக்கிங்குகள் ஆக்கிரமிப்பு படையெடுப்பாளர்கள் மற்றும் குடியேறிகள் என்று வரலாற்றாய்வாளர் டவுனெண்ட் கூறுகிறார்.

அவர்கள் வெறும் தாக்குதல்கள் நடத்துவது மற்றும் கொள்ளையடித்து விட்டுச் செல்பவர்களாக இருக்கவில்லை. 300 வருட வைக்கிங் காலத்தில், பலர் பல இடங்களிலேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களுக்கான அவர்களின் அணுகுமுறை, குண்டர் குழுக்களிந் சோதனைக் கட்சிகளை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்கிறார் அவர்.

"வைக்கிங்குகள் உள்ளூர்வாசிகளை அழித்தொழிக்கவில்லை. அப்படியானால் இந்த இரண்டு குழுக்களும் எப்படி ஒன்றாக வாழ்ந்திருப்பவர், அதுவும் பல நூறாண்டுகளுக்கு?" என்று கேட்கிறார் டவுனெண்ட்.

இது வைக்கிங்குகளின் வெற்றி மட்டுமல்ல, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய கதையாகிறது. வைக்கிங்குகளில் பலர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

உள்ளூர் மக்களுடன் வைக்கிங் இனத்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இங்கிலாந்தின் மன்னராக மாறி 25 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர் சினட், உயர் பதவிகளில் இருந்தவர்களை மாற்றினார், ஆனால் சமூகம் முன்பு போல் வாழ அவர் அனுமதித்தார். அங்கு மக்கள் பூர்விக பெயர்களையும் மரபுகளையும் கடைப்பிடித்தனர். " இதுபோன்ற கொடுக்கல் வாங்கல் புரிந்துணர்வுக்கு பலன் கிடைத்தது," என்கிறார் டவுனெண்ட்.

ஹாகோன் தி குட் இங்கிலாந்தில் இருந்தபோது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அவர் நார்வேயை ஆட்சி செய்ய திரும்பியபோது, "அது அவருக்கு சோதனைக்காலம் ஆக இருந்தது", என்று கூறிய டவுனெண்ட், "ஹாகோனின் மத நம்பிக்கைகள் அவரது பெரும்பான்மையான குடிமக்களுக்கு எதிராக இருந்தன," என்று குறிப்பிடுகிறார்.

வைக்கிங்ஸுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது விவாதிக்கத்தக்க வகையில் மோசமாக இருந்தது என்று வாதிடுகிறார் வரலாற்றாய்வாளர் டக்லி. நார்மன்கள் மிகவும் முறையான வழியில் விஷயங்களை கையில் எடுத்தனர். வைக்கிங்ஸ் செய்தது போல் அவர்கள் உள்ளூர் மக்களை ஒருங்கிணைக்காமல் ஒடுக்கினர் என்கிறார் டக்லி.

இதை எல்லாம் பார்க்கும்போது வரலாற்றின் திருத்தல்வாதமும் எதிர் வாதமும் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வைக்கிங்குகளின் கதை என வரும்போது அது வன்முறை, காலனித்துவம், வர்த்தகம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. அதில் அவர்கள் கொம்பு தலை கவசத்துடனோ அது இல்லாமலோ வாழ்ந்திருக்கலாம்.

சந்தேகம் தீர்த்த சமீபத்திய ஆய்வு

ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காட் ஜர்மன், "இத்தனை நாள் அந்த ராணுவத்துக்கு என்ன ஆனது என்ற தடயமே இல்லாமல் இருந்தது. இந்த எலும்புக் கூடுகள் மூலம் அந்த தடயம் கிடைத்துள்ளது," என்கிறார்.

மூர்க்கமான படையாக இருந்த வைக்கிங்ஸ், 866ஆம் ஆண்டு, ஓர் ஆக்கிரமிப்பு ராணுவப் படையாக உருவாகியது.

மானுடவியல் மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் ஜர்மன் சொல்கிறார், "இங்கிலாந்து எப்படி உருவாகியது என்ற சரித்திரத்தின் முக்கியப் பகுதி இது."

ஆங்கிலோ சாக்சன் அரசின் வீழ்ச்சி, வைக்கிங் அரசின் உருவாக்கம் அதற்கு ஆல்ஃபிரடின் எதிர்வினை என எல்லாம் சேர்ந்துதான் இங்கிலாந்தை உருவாக்கியது. ஆனால், போதுமான பெளதீக சான்றுகள் இல்லாமல் இருந்ததால், அதற்கு உரிய முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது.

செயின்ட் விஸ்டன் தேவாலயத்தில் மர்மமாக இருந்த ஒரு சிறு மேட்டு பகுதியை 1970 மற்றும் 80 ஆகிய அண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில் 264 பேரின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன

வைக்கிங்

பட மூலாதாரம், MARTIN BIDDLE

வைக்கிங் படைகள் 873ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ரெப்டானில் முகாமிட்டு இருந்தன. ஆனால், அதன் பிறகு அந்தப் படைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

செயின்ட் விஸ்டன் தேவாலயத்தில் மர்மமாக இருந்த ஒரு சிறு மேட்டு பகுதியை 1970 மற்றும் 80 ஆகிய அண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில் 264 பேரின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

அந்த 264 பேரில் 20 சதவீதம் பேர் பெண்கள். அந்த எலும்புக் கூடுகளில் போர் காயங்கள் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.

முன்பு, கார்பன் டேட்டிங் மூலமாக அந்த எலும்புகூடுகளின் காலத்தை கணக்கிட்டதில், அவை வைக்கிங் படையெடுப்புக்கு 200 ஆண்டுகள் முந்தையது என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஆனால், இந்த புதிய ஆய்வு அதனை மாற்றி உள்ளது.

ஜர்மன், "இந்த அகழ்வாய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட எலும்புகளில் பெண் எலும்புகளும் உள்ளன. அதில் போர் காயங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் போரில் பெண்களின் பங்கு குறித்து புரிந்துக் கொள்ள முடிகிறது." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :