ராஜஸ்தான் அணியை வீழ்த்திய சிஎஸ்கே: வெற்றிக்கு மாற்றிய அந்த சில வீரர்கள் யார்? - ஹைலைட்ஸ்

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI/ IPL

அதே வான்கடே மைதானம், முதலில் பேட்டிங் செய்து குவித்த ரன்கள் அதே 188 ரன்கள் தான், ஆனால் எட்டு நாட்கள் இடைவெளியில் போட்டியில் ரிசல்ட்டில் மட்டும் மிகப்பெரிய மாற்றம். 

டெல்லியிடம் முதல் போட்டியில் 188 ரன்கள் அடித்தும் தவான், பிரித்வி ஷாவின் அதிரடியில் நசுங்கிய சிஎஸ்கே, இன்றைய தினம் ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்திருக்கிறது. 

பஞ்சாபுடன் பெற்ற வெற்றியால் கிடைத்த உற்சாகத்தில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த ஐபிஎல் சீசனில் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. 

கிரிக்கெட் பகுப்பாய்வாளர்கள், வர்ணனையாளர்கள் மத்தியில் சில நாட்கள் முன்புவரை சிஎஸ்கே மிக வலுவான அணியாக கருதப்படவில்லை. அதற்கு காரணம் கடந்த சீசனில் சென்னை ஆடிய மோசமான ஆட்டம். அது மட்டுமல்ல இந்த சீசனில் முதல் போட்டியிலும் பந்து வீச்சில் சொதப்பியது. 

ஆனால் கடந்த இரு போட்டிகளில் அடுத்தடுத்து சென்னை அணிக்கு கிடைத்த வெற்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 

இந்த இரு போட்டிகளிலும் சென்னை அணி மிக நேர்த்தியாக விளையாடி வென்றுள்ளதுதான் சிறப்பான அம்சம். குறிப்பாக சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI / IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் துருப்புச் சீட்டாக மொயின் அலி உருவெடுத்திருக்கிறார். மூன்று போட்டிகளிலும் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

சரி, தோனி தலைமையில் சென்னை ராஜஸ்தானை வென்றது எப்படி? 

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பத்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து வலுவாகவே இருந்தது ராஜஸ்தான். 

அதிரடி வீரர் பட்லர் களத்தில் இருந்தார், இன்னும் மில்லர் இருக்கிறார், கடந்த போட்டியின் வெற்றி நாயகன் கிறிஸ் மோரிஸ் இருக்கிறார், கடந்த சீசனில் ராஜஸ்தானின் துருப்புச் சீட்டாக மிளிர்ந்த சிக்ஸர்களால் பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்த ராகுல் தீவாத்யா வேறு இருக்கிறார் என்பதால் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. 

ஆனால் வெறும் 21 பந்துகளில் ஆட்டத்தை தன் வசப்படுத்தியது தோனி அணி. 

டுவைன் பிராவோ தனது முதல் ஓவரில் நான்கு வைடுகளை வீசிச் சென்ற நிலையில். 11வது ஓவரை வீசிய ஜடேஜா ஜாஸ் பட்லரை ஏமாற்றி விக்கெட்டை தகர்த்தார். ஷிவம் துபே ஜடேஜாவை கணிக்க முடியாமல் எல்பி ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்த ஓவரை வீசிய மொயின் அலி, மில்லரை வெறும் இரண்டு ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். 15வது ஓவரை வீச மீண்டும் வந்த மெயின் அலி, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் என இருவரை வீழ்த்தி ராஜஸ்தானை அதிர்ச்சிஅடையச் செய்தார். 

11வது ஓவரில் இருந்து வெறும் 21 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான். இந்த புள்ளிதான் இன்றைய ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

கடைசி ஐந்து ஓவர்களில் ராஜஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். 

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

நேற்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்கு சூப்பர் மேனாக விளங்கினார். அவரை தோனி எந்த இடத்தில் நிறுத்தினாலும் பந்து ஜடேஜா கையில் தொடர்ந்து தஞ்சமைடைந்தது. .ஆம். நேறறு மட்டும் அவர் நான்கு கேட்ச்களை பிடித்தார். அதுமட்டுமல்ல 49 ரன்களில் அபாயகரமான பட்லரையும் போல்டாக்கி அசத்தி இருந்தார். 

மொயின் அலி மூன்று ஓவர்களை வீசி வெறும் ஏழு ரன்களை மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

முன்னதாக, ராஜஸ்தான் அணி நேற்று டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அணியில் எந்த மாற்றமுமின்றி சிஎஸ்கே களமிறங்கியது. ருதுராஜ் மீண்டுமொருமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவற, டு பிளசிஸ் பவர்பிளேவில் மளமளவென அதிரடி காட்டி ரன்களைச் சேர்க்க பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதும் கெளரவமான ரன்களை எடுத்திருந்தது சென்னை. 

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI / IPL

மொயின் அலி ஒன் டவுனில் இறங்கி இரண்டு சிக்ஸர்கள் வைத்தார். அவர் 20 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். 

ஏற்கெனவே, டெல்லி போட்டியிலும் இரண்டு சிக்ஸர்கள்,நான்கு பவுண்டரிகள் உட்பட 36 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏழு பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 46 ரன்கள் எடுத்திருந்தார் மொயின். 

இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரு தரப்பிலும் சிஎஸ்கேவுக்கு இவர் நம்பிக்கை வீரராக விளங்கி வருகிறார். 

சென்னைக்கு பேட்டிங்கில் பல வீரர்கள் பந்துகளை வீணடிக்காமல் சிறப்பாக விளையாடினர். இறுதி ஓவர்களில் பிராவோவின் அதிரடி காரணமாக சென்னை 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சேத்தன் சக்காரியா சிறப்பாக வீசினார். அவரது துல்லியமான பந்துகளில் தோனி, ரெய்னா, ராயுடு என மூன்று பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர். 

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதை மொயின் அலி வென்றார். 

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI / IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த அபாரமான வெற்றி காரணமாக ரன்ரேட் +1ஐ தாண்டியுள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளை விளையாடி முடித்து விட்ட நிலையில் அதிக நெட் ரன்ரேட் வைத்திருக்கும் அணியாக சென்னை உருவெடுத்துள்ளது. 

இதன் மூலம் மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளை புள்ளிப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

முதல் இடத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது. 

இன்னும் ஒரே நாள் இடைவெளியில் கொல்கத்தாவை சந்திக்கிறது சென்னை. 

அந்தப்போட்டியில் வென்றால் சென்னை புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும். 

இந்த சீசனில் சென்னை அணி கோப்பைக்கான ரேஸில் துடிப்புடன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த இன்னும் பல வெற்றிகள் தேவை. பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: