டெல்லியில் ஆறு நாட்களுக்கு பொது முடக்கம் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

நேயர்கள் கொரோனா குறித்த செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரவிந்த் கெஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

இந்திய தலைநகர் டெல்லியில் ஆறு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்கம் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 5 மணி வரை நீடிக்கும்.

இந்த பொதுமுடக்கம் ஏழை மக்களுக்குக் கடினமாக இருக்கும் என்றும், இருப்பினும் இந்த சமயத்தில் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என தான் கேட்டு கொள்வதாகவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

"பொதுமுடக்கம் என்பது கொரோனாவை அழிக்காது. இருப்பது தொற்று பரவும் வேகத்தை அது குறைக்கும். இந்த ஆறு நாட்களில் படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும்." என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்க காலத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு

மம்தா

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மம்தா பேனர்ஜி இனி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெரிக் ஓ ப்ரைன் இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு முன்னதாக மட்டும் ஒரே ஒரு பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பேரணிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், எந்த ஒரு கூட்டமும் அரை மணி நேரத்துக்கு மேல் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவடைகிறது.

அம்மாநிலத்தில் எட்டுக் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மூன்று கட்டங்கள் ஏப்ரல் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வரும் சூழலில் அதிக கூட்டத்தினரோடு தேர்தல் பிரசாரம் நடைபெறுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களை தள்ளி வைப்பதாக ஞாயிறன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடியா மாவட்டத்தில் ஞாயிறன்று தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமையன்று அசான்சூல் என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் ஏப்ரல் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் பிரதமர் நரேந்திர மோதி மாநிலத்துக்கு வருகை தரவுள்ளார்.

ஏப்ரல் 22ஆம் தேதி, மால்டா மற்றும் முர்ஷிதாபாத் என்னும் இடங்களில் கூட்டங்களிலும், ஏப்ரல் 24ஆம் தேதி போல்பூர் மற்றும் கொல்கத்தா தெற்கு பகுதியில் நடைபெறும் பேரணிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

முன்னதாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகளையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் அங்கு இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரம் நடைபெறலாம் என்று இருந்த நிலையில் தற்போது மாலை 7 மணி வரை மட்டுமே பிரசாரங்கள் நடைபெற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

கொரோனா சோதனை

பட மூலாதாரம், Getty Images

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: