டி20 உலகக்கோப்பை: புதுமைகளை பரீட்சிக்கும் இந்தியா - வீரர்களை மெய் சிலிர்க்க வைத்த ராகுல் டிராவிட்

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவில் இருக்கும் இந்திய அணி என்ன செய்கிறது?

பட மூலாதாரம், VIMAL KUMAR

    • எழுதியவர், விமல் குமார்
    • பதவி, நியூயார்க்கில் இருந்து மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசா கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் முதல் பயிற்சியின் போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி செய்தியாளர்களுக்கு கூட மைதானத்துக்குள் செல்வது பெரும் சவாலாக இருந்தது.

முதல் நாள் பயிற்சியின் போது, அதிகபட்சமாக பந்துவீசியதும் பேட்டிங் செய்ததும் ஹர்திக் பாண்டியா தான்.

ஹர்திக் பேட்டிங் செய்யும் போதெல்லாம், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோட் அவருடன் அடிக்கடி பேசி ஆலோசனைகள் வழங்கினார்.

ஹர்திக் விளையாடும் பாணியைப் பார்க்கும்போது, ​​ஒருவேளை அவரது பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டு, ஒரு ஃபினிஷராக ஆக்ரோஷமான பாணியில் விளையாடிய பழைய ஹர்திக் பாண்டியா திரும்ப வருவார் என்று தோன்றியது.

இரண்டாவது நாளிலும், ஹர்திக் கடுமையாக பேட்டிங் செய்தார். மேலும் தனது பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோட் ஆகியோருடன் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

இந்திய அணி பயிற்சி மேற்கொண்ட போது , ராகுல் டிராவிட் மூன்று மணி நேரமும் அசையாமல் முழு பயிற்சியையும் முழு கவனத்துடன் பார்வையிட்டார். தலைமை பயிற்சியாளரின் இந்த செயல் பாராட்டுக்குரியது.

வீரர்களை மெய் சிலிர்க்க வைத்த டிராவிட்

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவில் இருக்கும் இந்திய அணி என்ன செய்கிறது?

பட மூலாதாரம், VIMAL KUMAR

படக்குறிப்பு, பயிற்சி ஆட்டத்தின் போது ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் கில்

இந்திய அணியின் சுவர் (The Wall) என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட், பயிற்சியின் போது வெளிப்படுத்திய உடல் மொழி, ஆடுகளத்தில் பேட்ஸ்மேனாக இறங்கி விளையாட விரும்புகிறாரோ என்று உணர வைக்கிறது.

கிரிக்கெட்டில் பெரிய ஜாம்பவான் என்ற போதிலும், தன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பும் இளம் வீரர்களுக்கு டிராவிட் அதிக நேரம் ஒதுக்கி ஆலோசனைகள் வழங்குகிறார்.

அங்கே சில இளம் அமெரிக்க-இந்திய வீரர்கள் வலைப் பந்துவீச்சாளராக செயல்பட்டனர். இந்த வீரர்களுக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவது பெரிய விஷயமாக இருந்திருக்கும்.

அதேசமயம், டிராவிட் அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பேசிய விதம் அந்த இளம் வீரர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

டிக்கெட் விலை உயர்வு

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவில் இருக்கும் இந்திய அணி என்ன செய்கிறது?

பட மூலாதாரம், VIMAL KUMAR

மற்றொருபுறம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் தட்டுப்பாடு மற்றும் தாறுமாறான விலை உயர்வு காரணமாக நியூயார்க்கில் உள்ள இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக நியூயார்க்கில் வசிக்கும் டெல்லியைச் சேர்ந்த வினித் ஆர்யா, `இந்திய மக்கள் எவ்வளவு விலை கொடுத்தாவது டிக்கெட்டுகளை வாங்கிவிடுவார்கள் என்பதை ஐசிசி புரிந்து வைத்திருக்கிறது’ என்று கூறுகிறார்.

இது உண்மைதான். ஆனால், அதீத கட்டணத்தால் போட்டிக்கான டிக்கெட் இந்தியர்களின் கைக்கு எட்டவே இல்லை.

"நான் வசிக்கும் நகரில் இவ்வளவு பெரிய உலகக் கோப்பை போட்டி நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை” என்று வினித் கூறுகிறார்.

இதனை நினைத்து வினித் பெருமிதம் கொள்கிறார். ஆனால் அந்த போட்டியை பார்க்க நகர மக்கள் பெரும்பாலானோர் மைதானத்தில் இருக்க மாட்டார்கள் என்ற ஏமாற்றமும் அவருக்குள் இருக்கிறது.

இரண்டு நாள் பயிற்சியில் வெளிவந்த ஒரு விஷயம் என்னவென்றால், டிரா-இன் (draw-in) பிட்ச்களில் பவுன்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிட்ச்களைப் போலவே அப்படியே உள்ளது.

பயிற்சியின் போது, ​அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு சூர்யகுமார் யாதவை ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம், ஹர்திக் பாண்டியாவும் அவரது வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் ஷிவம் துபேயை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

மொத்தத்தில், அவுட்பீல்டு சற்று மெதுவாக இருந்தாலும், பிட்ச்சில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியா அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே காலை முதல் மாலை வரை 1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணி வீரர் யார் வெளியே வந்தாலும், சாலையில் சென்றாலும் ரசிகர்கள் செல்ஃபி எடுப்பதற்காக சூழ்ந்து கொள்கிறார்கள்.

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவில் இருக்கும் இந்திய அணி என்ன செய்கிறது?

பட மூலாதாரம், VIMAL KUMAR

செல்ஃபி எடுக்க போட்டி

இந்தி அணி வீரர்கள் நியூயார்க்கில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த அன்று, அந்த ஹோட்டலின் ஒரு பகுதியில் ஒரு இந்திய குடும்பத்தின் திருமண விழா நடந்து கொண்டிருந்தது, திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும் இந்தியய அணி ஹோட்டலில் தங்கியிருக்கும் செய்தி நகரம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது.

பலர், இந்திய கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்கும் உற்சாகத்தில் அந்த ஹோட்டலில் ஒரு நாளைக் கழிக்க 1,000 டாலர் (ரூ.83,425) வரை செலவழிக்கத் திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகிகள் சூழலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். இந்திய அணி வீரர்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஐசிசி விரும்புகிறது. ஆனால் ​​உள்ளூர் மக்கள் பயிற்சி ஆட்டங்களை பார்ப்பதிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ரசிகர்களுக்கு ஆட்டத்தைப் பார்க்க அனுமதி இல்லை என்று பல ரசிகர்கள் புகார் கூறுகின்றனர்.

மகேந்திர சிங் தோனியைப் பார்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானம் முழுவதும் நிரம்பி வழிவது போலவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதை பார்க்க விரும்புகிறார்கள் என்பது அவரது வாதம். இதை ஐசிசி கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா?

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், VIMAL KUMAR

இந்திய அணி புதிய முயற்சி

இறுதியாக, இந்திய அணியின் புதிய முயற்சியை பற்றி பேசலாம். இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் பேட்டிங் வரிசையின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகின்றன.

முதல் இரண்டு நாட்கள் பயிற்சியின் போதும், இந்திய அணி இரண்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் ஒரு கீழ் வரிசை (lower) பேட்ஸ்மேனை முதலில் பேட்டிங் செய்ய அனுப்பியது.

உலகக்கோப்பையில் போட்டிகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்துள்ளது. எனவே பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் கடைசி சில ரன்கள் கூட போட்டியின் திசையை மாற்றும் சாத்தியம் உள்ளது.

எனவே, பயிற்சியின் முதல் நாளில், அர்ஷ்தீப் சிங், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்யாவுடன் பேட்டிங் செய்தார். இரண்டாவது நாளில், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு பயிற்சி செய்யாமல் முதலில் பேட்டிங் செய்தார்.

இதுமட்டுமின்றி அனைத்து பந்துவீச்சாளர்களும் இரண்டு நாட்களும் குறைந்தது அரை மணிநேரமாவது பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)