தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்த 4 இலங்கையர்கள் பிரிட்டனில் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்த 4 இலங்கையர்கள் பிரிட்டனில் கைது

பட மூலாதாரம், Getty Images

தடை செய்யப்பட்டுள்ள இயக்கமொன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இலங்கையர்கள் பிரிட்டனின் பயங்கரவாத விசாரணை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் லுட்டன் விமான நிலையத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டம் மற்றும் 1984ஆம் ஆண்டு குற்றசாட்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை பிரிட்டன் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

35,39 மற்றும் 41 வயதான ஆண் சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்த 4 இலங்கையர்கள் பிரிட்டனில் கைது

பட மூலாதாரம், LDN

குறித்த மூன்று சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 35 வயதான பெண் சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் வாரம் வரை பிணையில் விடுவிக்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரிட்டனின் 2000ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டத்தின் 11ஆவது சரத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கம் வகிப்பது சட்ட விரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

வட்டுவாகல் பாலத்தில் வாழ்வா? சாவா? போராட்டம்: 10 ஆண்டுகளுக்குமுன் நடந்தது என்ன?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :