ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், ANI
இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பட மூலாதாரம், ANI
பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன.

பட மூலாதாரம், ANI
பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விமானங்களில் ஆர்பி - 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் பாதூரியாவின் பெயரைக் குறிப்பதாகும். அவர்தான் 60,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முக்கியப் பங்காற்றியவர்.
திங்களன்று மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற ராஜ்நாத் சிங், இந்த பயணத்தின் மூலம் தற்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள தந்திரோபாயக் கூட்டணி மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரான்ஸ் அதிபர் மக்ரூங்கை சந்தித்தார் ராஜ்நாத் சிங்.
இந்த சந்திப்பு பயனுள்ள ஒரு சந்திப்பு என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த சந்திப்பு இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் எனவும், குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












