முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்: சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா
சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

பட மூலாதாரம், CHINA PHOTOS/GETTY IMAGES
இந்த நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு ஒன்று கூறுகிறது. மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் தடை குறித்து சீனா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

"நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது"

மருத்துவ படிப்பிற்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வான நீட் வேண்டாம் என்று போராடிய தமிழகம், தற்போது நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் தேர்வர்கள் சிலர் தங்களுக்குப் பதிலாக வேறொருவரை தேர்வெழுத வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான பிறகு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க என்னென்ன செய்யலாம் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது முதலாமாண்டு படிக்கும் உதித்சூர்யா, தனக்குப் பதிலாக வேறொருவரை நீட் தேர்வு எழுதவைத்து மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றார் என்ற குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியான பிறகு, உதித் சூரியா கைதானார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்று நிறைவு பெற்றது. இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விரிவாகப் படிக்க:இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு: 35 பேர் போட்டி

பிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்

பட மூலாதாரம், MUGEN RAO / FB
விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும் 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சி உலகெங்கும் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் வாகை சூடியுள்ளார் மலேசிய இளம் கலைஞர் முகேன் ராவ். வெற்றி சுலபத்தில் கை கூடுவதில்லை. ஒவ்வொரு வெற்றியின் பின்னனியிலும் அளவில்லா உழைப்பும் வலிகளும் பதிவாகியிருக்கும் என்பது முகேன் விஷயத்திலும் உண்மையாகி இருக்கிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்படி மாறுபடும் ஆக்சிஜன் அளவுக்கேற்ப தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.வில்லியம் கேலின், சர் பீட்டர் ரேட்கிளிஃபீ, கிரெக் செமன்சா ஆகிய மூவரும் கூட்டாக இந்த நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரகசிய புலனாய்வு: Iraq-ல் Pimp வேலையில் shia Muslim குருமார்கள் | BBC Secret Investigation
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












