93 உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலை நடத்த தீர்மானம்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP/Getty Images
சர்ச்சை இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனு கோர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தீர்மானித்துள்ளார்.
தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார்.
கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் குறித்த அறிவிப்பு நாளை மறுதினம் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதுடன், அவற்றில் 243 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக வழக்கு காணப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் கடந்த 2 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்யுமாறு கோரி ஆறு வேட்பாளர்களினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்துவதை டிசம்பர் 4 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












