இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா பாக்டீரியாவை பயன்படுத்த திட்டம்
தீவிரமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியா வகையொன்றை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் டெங்கு காயச்சலை பரப்பும் நுளம்புகளை அழிக்கக்கூடிய பாக்டீரியா வகையொன்று ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த பாக்டீரியாவை இலங்கைக்கு கொண்டுவந்து பரப்புவதன் மூலம் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை அழிக்கமுடியும் என கூறியுள்ள அமைச்சர் சேனாரத்ன, இதனை பெற்றுக்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
டெங்கு நோய் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்குள் 200 பேர்வரை இறந்துள்ளதாக கூறிய அமைச்சர் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
மேல் மாகாணத்தைச் சேர்ந்த கொழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கூடுதலான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக சில அரசு மருத்துவமனைகளில் நோயாளர்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களின் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












