டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், SPL
டெங்கு என்றால் என்ன?
- ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
- இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
- உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
- ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்
- ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.
அறிகுறிகள்
- தலைவலி
- காய்ச்சல்
- தோலில் தடிப்புகள்
- உடம்பு வலிகள்
- இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்
- இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.
பிபிசியின் பிற செய்திகள்
டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா?
- குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.
- ஆனால் டி.எச்.எஃப் என்ற ஒரு வகை ஜுரம் உயிராபத்தை தோற்றுவிப்பதாக இருக்கலாம்.
பிபிசியின் பிற செய்திகள்
செய்ய வேண்டியவை
- கொசுக்கடியிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்
- பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்
- அதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும்
- இதற்கு தடுப்பு மருந்து கிடையாது
- ஆனால் ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பொதுவாக அதே ஆண்டு மீண்டும் அந்நோய் வராது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












