மும்பை ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டவைத்த சிவசேனா எம்.எல்.ஏ திலிப் லண்டே

திலிப் லண்டே

பட மூலாதாரம், ANI

மும்பை நகரத்தில் ஓர் ஒப்பந்ததாரரை நீர் தேங்கியுள்ள சாலையில் அமரச் செய்து, அவர் மீது குப்பைகளைக் கொட்டுமாறு கட்சி ஊழியர்களிடம் கூறியுள்ளார் மகாராஷ்டிரவில் ஆளுங்கட்சியாக இருக்கும் சிவ சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டே.

இந்த சம்பவம், ஜூன் 12, சனிக்கிழமை நடந்ததாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏன் இப்படி செய்தீர்கள் என சண்டிவலி சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டேவைக் கேட்ட போது, ஒப்பந்ததாரர் தன் வேலையை முறையாகச் செய்யவில்லை. கழிவு நீர் வடிகாலை முறையாக சுத்தம் செய்யவில்லை எனவே தற்போது சாலையில் நீர் தேங்கிக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

"சாலையில் நீர் தேங்காமல் சுத்தம் செய்யுமாறு, நானே கடந்த 15 நாட்களாக ஒப்பந்ததாரரிடம் கூறி வந்தேன். அவர் தன் வேலையை செய்யவில்லை. சிவ சேனா உறுப்பினர்களே இறங்கி வேலை செய்தனர். அதை தெரிந்து கொண்ட ஒப்பந்ததாரர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். இது அவருடைய வேலை என நான் அவரிடம் கூறினேன்" என்கிறார் திலிப் லண்டே.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த சம்பவம் தொடர்பாக இணைய தளத்தில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தும், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டேவை கண்டித்தும் வருகிறார்கள்.

மும்பை கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த வெள்ளிக்கிழமை மும்பை நகரத்தின் மேயர் கிஷோரி பெட்னேகர் கூறி இருந்தார்.

மேலும் கால்வாய்களில் குப்பை கொட்டுபவர்களைக் கண்டுபிடிக்க, சிசிடிவி பதிவுகளைப் பயன்படுத்துமாறும் நவி மும்பை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

"கழிவு நீர் வடிகால்களில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் கொட்டுவதால், மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கிக் கொள்கிறது. எனவே வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது" என கூறினார் மும்பை நகர மேயர் பெட்னேகர்.

மும்பை நகரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. எனவே மும்பை நகரத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளதுடன் சாலைகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :