குழந்தைகளின் கல்விச் செலவுக்காக உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் 7 எளிய வழிகள்

தனிநபர் நிதி மேலாண்மை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
    • பதவி, பிபிசிக்காக

'முதலீடு என்பது நீண்ட கால பலன்களைப் பற்றியது' என்கின்றனர் தனிநபர் நிதி நிபுணர்கள்.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது தனிநபர் நிதிக் கொள்கைகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில், குறுகிய கால நிதித் தேவைகளையும் புறக்கணிக்கக்கூடாது.

இந்தக் குறுகிய காலத்தை எவ்வாறு முடிவு செய்வது? என்ன தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் நம்மில் பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

மூன்று வருட காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி இலக்குகள் குறுகிய கால இலக்குகளாக கருதலாம். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் செலவினத் தேவைகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப வரவு செலவுகளைத் திட்டமிடுவதும் மிக முக்கியமானது.

இந்த குறுகிய கால நிதி இலக்குகள் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

தனிநபர் நிதி

பட மூலாதாரம், Getty Images

என்ன தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும்?

குறுகிய காலத்தில் நாம் என்ன தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு கீழே சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் பள்ளி கட்டணம்
  • ஆயுள் காப்பீட்டின் வருடாந்திர பிரீமியம், சுகாதார காப்பீட்டிற்கான பிரீமியம்
  • வாகன காப்பீடு மற்றும் வாகன பழுது பார்ப்பதற்கான செலவுகள்

மேலே உள்ள அனைத்தும் தவிர்க்க முடியாத அதிக செலவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல், திடீர் மற்றும் திட்டமிட்ட பயணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவதும் குறுகிய கால செலவுகளாக கருதப்பட வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வரும் இந்த செலவுகளால், அந்த ஆண்டு முழுவதும் நம் முதலீட்டை பாதிக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

வருடாந்திர செலவினங்களுக்காக முதலீடு செய்வது ஏன் என்று ஒரு வாதமும் உள்ளது. ஆனால், அது சரியல்ல. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

  • வருமானத்தைப் பெருக்கும் வாய்ப்புகளில் ஈடுபாடு இல்லாமல் நாம் நம்மிடம் உள்ள வாய்ப்பை நழுவ விடக்கூடாது. எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தவிர்க்க முடியாத செலவுகளை மனதில் வைத்து, மாதச் சம்பளத்தில் இருந்து முடிந்த அளவு செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தனிநபர் நிதியின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும்.
தனிநபர் நிதி மேலாண்மை

பட மூலாதாரம், Getty Images

1. முதலீட்டின் பாதுகாப்பு

கட்டாய செலவினங்களுக்காக முதலீடு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், முதலீடு செய்யப்படும் தொகையைப் பாதுகாப்பதாகும்.

ஏனெனில் முதலீடு செய்யப்படும் தொகை நமது நிதி இலக்கிற்கு ஏற்றதாக இருக்கும் போது, அந்த தொகை நமது மாதச் செலவுகளுக்கு தேவையானதாக இருக்கக் கூடாது. அந்தத் தொகையால் மாதச் செலவுகளுக்கு நெருக்கடி ஏற்படக்கூடாது. அப்படி இருந்தால், தான் அந்தத் தொகையை நம்மால் பாதுகாக்க முடியும்.

நீண்ட கால இலக்குகளுக்காக முதலீடு செய்வதற்கும் குறுகிய கால இலக்குகளுக்காக முதலீடு செய்வதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.

இந்தியா முதலீடு

பட மூலாதாரம், Getty Images

2. முதலீட்டை திரும்பப் பெறுதல்

இந்த குறுகிய கால முதலீட்டில் அடிப்படையாக சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு விரைவாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

ஏனெனில், சில சமயங்களில் இந்த வகையான செலவுகளுக்கு, அதாவது பள்ளிக் கட்டணம், காப்பீட்டு கட்டணம், வாகன பழுது நீக்குதல் செல்வு உள்ளிட்டவைக்காக, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற வேண்டியிருக்கும்.

இதுபோன்ற சமயங்களில் முதலீட்டில் சிறிதளவு அல்லது அனைத்தையும் கூட திரும்பப் பெறுவது எளிது.

தனிநபர் நிதி மேலாண்மை

பட மூலாதாரம், Getty Images

3. முதலீட்டின் மீதான வருவாய்

எந்தவொரு நிதி இலக்கிற்கும் முதலீட்டின் மீதான வருமானம் முக்கியமானது. அதிக வருமானம் தரும் முதலீட்டு வழிகளை ஒருவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், இது குறுகிய கால இலக்குகளுக்கான முதலீடாக இருப்பதால், நமது முதலீடு உறுதி செய்யப்படுவதை நாம் விரும்ப வேண்டும். ஏனென்றால் அது நமது தேவைக்கான முதலீடு.

இப்போது முதலீட்டு விருப்பங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

தனிநபர் நிதி மேலாண்மை

பட மூலாதாரம், Getty Images

4. பிக்சட் டெபாசிட்

இது மிகவும் பிரபலமான வழி. கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வசதியை வழங்குகின்றன.

இதன் காலம் 45 நாட்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். நமது தேவைக்கு ஏற்ப காலத்தை தேர்வு செய்யலாம்.

முதலீட்டுடன் வங்கியில் இருந்து வட்டி பெறுவது உறுதியானால், அந்த வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

ஒரு குறுகிய கால நிலையான வைப்பு இயற்கையாகவே குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆனால், வங்கி நமக்குக் கொடுக்க வேண்டிய தொகையை ரிஸ்க் இல்லாமல் நிச்சயம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலானோர் இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட காலாண்டு வட்டி விகிதங்களின் தாக்கம் நிலையான வைப்புகளில் அதிகமாக உள்ளது.

இந்தியா பணம்

பட மூலாதாரம், Getty Images

5. ரெக்கரிங் டெபாசிட்

பிக்சட் டெபாசிட் போல ஒரே நேரத்தில் பெரிய தொகையை வங்கியில் முதலீடு செய்யாமல் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறை ரெக்கரிங் டெபாசிட் ஆகும். இது கடந்த காலத்தில் மிகவும் பிரபலமான முதலீட்டு வழியாகவும் இருந்தது.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த விருப்பம் இருப்பதால் ரெக்கரிங் டெபாசிட் முறை கவனத்தை ஈர்த்துள்ளது.

ரெக்கரிங் டெபாசிட் தொகை மூலம் பெறப்படும் தொகையும் வருமான வரிக்கு உட்பட்டது. மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபியைப் போலவே, இது நடுத்தர வர்க்க மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முதலீட்டு முறையாகும்.

தனிநபர் நிதி மேலாண்மை

பட மூலாதாரம், Getty Images

6. கடன் நிதிகள்

கடன் பரஸ்பர நிதிகள் (Debt mutual funds)மூலம் முதலீடு செய்யப்படும் தொகையை நிர்வகிப்பதற்கு நிதி மேலாளர் பொறுப்பு. நிதி மேலாளர் முதலீட்டைக் கொண்டு சில பத்திரங்களை வாங்கி அதில் கிடைக்கும் வட்டியை நமக்கு வருமானமாகத் தருகிறார். அடிப்படையில் இது கடன் கொடுப்பவருக்கும் கடன் வாங்குபவருக்கும் இடையேயான பரிவர்த்தனை போன்றது.

பத்திர வருவாயில் பரவலான மாறுபாடு இருப்பதால் நிதி மேலாளரின் பங்கு இதில் முக்கியமானது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டை(equity mutual fund) விட வருமானம் குறைவாக இருந்தாலும் அதிக ரிஸ்க் எடுக்க முடியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட வருமானம் நிச்சயம் அதிகமாக இருக்கும்.

நீண்ட கால மூலதன ஆதாயங்கள்(Long Term Capital Gains) (LTCG) அல்லது குறுகிய கால மூலதன ஆதாயங்கள்(Short Term Capital Gains) (LTCG) கீழ் வருவதால், கடன் நிதிகள் மீதான வருமானமும் பிரபலமாக இல்லை.

இந்தியா பங்குச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

7. லிக்விட் ஃபண்ட்கள்

மியூச்சுவல் ஃபண்டுகளில் லிக்விட் ஃபண்ட்கள் தனித்துவமானது.

செபி(SEBI) விதிமுறைகளின்படி, லிக்விட் ஃபண்ட்கள் ஒரு துறையில் அதிகபட்சமாக 20% முதலீடு செய்யலாம். பணச் சந்தை போன்ற வழிகளிலும் முதலீடு செய்யுங்கள், இது குறைந்தபட்சம் 20% விரைவாக திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஒழுங்குமுறை காரணமாக லிக்விட் ஃபண்ட்களில் உள்ள ஆபத்து கணிசமாக குறைக்கப்பட்டது. மேலும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு லிக்விட் ஃபண்ட்களில் குறைவாகவே உள்ளது.

நீண்ட கால நிதி இலக்குகளைப் போலவே, குறுகிய கால நிதி இலக்குகளையும் முதலீட்டின் அடிப்படையில் கருத்தில் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரை குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக மட்டுமே. உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)