மகாராஷ்டிரா: ரயில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து விபத்து - குறைந்தது 13 பேர் காயம்

பட மூலாதாரம், BBC Marathi
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் திடீரென உடைந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை ரயில்வே அதிகாரிகள் பிபிசி மராத்தி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தின்போது, நடைபாதை மேம்பாலத்தில் நடந்துகொண்டிருந்த சிலர் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், BBC Marathi
இவ்விபத்தில் மொத்தமாக 13 பேர் நடைபாதை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் அவர்களுள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









