அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் என்ன நிலவரம்?

பட மூலாதாரம், X/pmoorthy21
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது.
திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் எட்டு சுற்றில் இருந்து 12 சுற்று வரை நடைபெறும். இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
ஐந்தாம் சுற்று முடிவில் நிலவரம்
ஐந்தாம் சுற்று முடிவில், களம் சென்ற 464 மாடுகளில், 109 மாடுகள் பிடிபட்டன.
வீரர்கள் முன்னிலை நிலவரம்:
கார்த்தி, அவனியாபுரம் - 16
ரஞ்சித், அவனியாபுரம் - 9
பிரகாஷ், சோழவந்தான் - 6
5ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள்:
விஜயகுமார், அய்யனார்குளம் - 5
அரவிந்த், குன்னத்தூர் - 4
பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4
அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2
நான்காம் சுற்று நிலவரம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்றின் முடிவில் மொத்தம் 376 மாடுகள் களம் சென்றன. அவற்றில் 89 மாடுகள் பிடிபட்டன.
வீரர்கள் முன்னிலை நிலவரம்:
கார்த்தி, அவனியாபுரம் - 16
ரஞ்சித், அவனியாபுரம் - 9
பிரகாஷ், சோழவந்தான் - 6
4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள்:
ரஞ்சித், அவனியாபுரம் - 9
டேவிட் வில்சன், புகையிலைப்பட்டி - 4
பரணி, அய்யம்பாளையம் - 2
ராகுல், அவனியாபுரம் - 2
மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
மூன்றாம் சுற்று நிலவரம்
10 மணி வரையிலான தரவுகளின்படி, பரிசோதனைக்கு சென்ற 356 காளைகளில், 332 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 24 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
மூன்றாவது சுற்று முடிவில் களம் சென்ற மொத்த மாடுகளின் எண்ணிக்கை 288. அதில் 61 மாடுகள் பிடிபட்டன.
வீரர்கள் முன்னிலை நிலவரம்:
அதிக காளைகளைப் பிடித்து முன்னணியில் உள்ள வீரர்களின் பட்டியல்
- கார்த்தி, அவனியாபுரம் - 16
- பிரகாஷ், சோழவந்தான் - 6
- விக்னேஷ், சாப்டூர் - 3
- முத்துப்பாண்டி, பேரையூர் - 3
- ரிஷி, அவனியாபுரம் - 2
- முரளி, மாடக்குளம் - 2
முதல் சுற்று
காலை 8 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 137 காளைகளில் 126 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
முதல் சுற்று முடிவில் 11 மாடுகள் பிடிபட்டுள்ளன. இந்த சுற்றில் 11 வீரர்கள் தலா ஒரு மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், X/pmoorthy21
பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இங்கு மொத்தம் 15 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,
காயத்திற்கு உள்ளாகும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

பட மூலாதாரம், X/pmoorthy21
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












