குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு தகுதி சான்றிதழ் கொடுக்கப்பட்டதா?

குஜராத் தொங்கு பாலம் விபத்து

பட மூலாதாரம், Bipin Tankaria

மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்த அரசு நிர்வாகமும் மோர்பியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் முதல்வர், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்

இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன. பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பாலத்திற்கு தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமானோர் வந்து சென்றது தெரிய வந்தது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களான அமித் படேல், சுக்ராம் இருவரும் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "இதுவொரு சுற்றுலா தலம். ஆகவே, தீபாவளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் ஏராளமான மக்கள் இங்கு வந்திருந்தனர். பாலத்தின் மீது அதிகளவில் மக்கள் கூடியதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். பாலம் விழுந்ததும், மக்களும் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர்," என்று கூறினர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சம்பவம் நடந்தது எப்படி?

விபத்து குறித்து மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப் ஜாலா பேசுகையில், "பாலம் மிகவும் பழுந்தடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் பயன்பாட்டைத் தவிர்த்து மூடப்பட்டது. அஜந்தா ஒரேவா குழுமம் பாலத்தின் பழுது, பராமரிப்பு பணிகளை முன்னெடுத்தது," என்றார்.

மோர்பி நகராட்சி தலைமை அதிகாரி சந்தீப் ஜாலா

பட மூலாதாரம், Rajesh Ambaliya

படக்குறிப்பு, மோர்பி நகராட்சி தலைமை அதிகாரி சந்தீப் ஜாலா

மேலும், "ஆட்சியரும் கூட இந்த விவகாரம் தொடர்பாகக் கூட்டம் நடத்தினார். கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, பழுது பார்த்து மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதியன்று ஒரேவா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 15 ஆண்டுகள் பராமரிப்பு செய்ய வேண்டிய பணியும் அடக்கம்," என்று கூறினார்.

பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய சந்தீப் சிங் ஜாலா, "மார்ச் மாதத்தில் பாலம் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூடப்பட்டது. அக்டோபர் 26ஆம் தேதியன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் திறக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் நகராட்சி இந்த சீரமைப்புப் பணிகளுக்கு எந்த தகுதிச் சான்றிதழையும் வழங்கவில்லை," என்று கூறுனார்.

குஜராத் தொங்கு பாலம் விபத்து

பட மூலாதாரம், Bipin Tankaria

முழு செயல்முறை குறித்துப் பேசிய தலைமை அதிகாரி சந்தீப் ஜாலா, "ஒப்பந்தத்தின்படி குழு சீரமைப்பு பணியைத் தொடங்கியதோடு அதுகுறித்த பல்வேறு ஊடக செய்திகளையும் வெளியிட்டது. இது சீரமைப்புப் பணி நடந்து கொண்டிருப்பதை எங்களுக்கு உணர்த்தியது. ஊடக செய்திகளின் வாயிலாக, இந்த பாலத்தின் பழுதுபார்க்கும் பணியில் சிறந்த தரம்வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது," என்று கூறினார்.

ஆனால், இப்போது பாலம் எப்படி இடிந்தது, அதன் கொள்ளளவு என்ன, தகுதிச் சான்றிதழை எடுத்தார்களா இல்லையா, அதில் என்ன வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது," என்று மேலும் கூறினார்.

பாலத்தில் அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளைப் பற்றிப் பேசிய ஜாலா, "பாலத்தின் கொள்ளளவை விட அதிகமான ஆட்கள் பாலத்தில் செல்வதற்கு அனுமதித்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்," என்றார்.

குஜராத் தொங்கு பாலம் விபத்து

பட மூலாதாரம், Bipin Tankaria

பாலம் பழுது பார்க்கப்பட்டது குறித்துப் பேசியவர், "வேறு தனியார் நிறுவனத்திடம் சீரமைப்புப் பணியை ஒப்படைத்துள்ளனர். இப்போது அவர்கள் தேவையான சான்றிதழ்களை தனிப்பட்ட முறையில் பெற்றார்களா என்பதைக் கண்டறிய முயல்கிறோம். அந்தக் குழுமத்தின் பிரதிநிதியைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அடுத்து அலுவலகத்திலிருந்து பதிவுகளைப் பெறுவதற்கான செயல்முறைகளைத் தொடங்குவோம்," என்றார்.

காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் குறித்துக் கூறும்போது, "நகராட்சிக் குழு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. ராஜ்கோட் மாநகராட்சி குழுவும் எங்களுக்கு உதவுகிறது. திரகந்தா, ஹல்வாட், மாலியாவில் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன. தனியார் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன," என்றார்.

குஜராத் தொங்கு பாலம் விபத்து

பட மூலாதாரம், Rajesh Ambaliya/ UGC

மோர்பி மாவட்ட நிவாரண ஆணையர் ஹர்ஷத் படேல் பிபிசி குஜராத்தியிடம், "இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், மாநில நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் குழுக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இப்போது காயமடைந்தவர்களுக்கு விரைவில் உரிய சிகிச்சைகளை வழங்குவதற்கு இடம் மாற்றுவது தான் எங்களுடைய முன்னுரிமை. மாநில அரசும் மத்திய அமைப்புகளும் நிவாரணம், மீட்புப் பணிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன," எனக் கூறினார்.

Banner
காணொளிக் குறிப்பு, குஜராத் தாய்க்கும் பிரேசில் தந்தைக்கும் பிறந்த கன்றுக்குட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: