குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: புகைப்படத் தொகுப்பு

குஜராத் மோர்பி நதியில் பாலம் இடிந்து விபத்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தீபாவளி கொண்டாட்டம் காரணமாக, சம்பவத்தின் போது பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மோர்பியில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது 230 மீ (754 அடி) பாலம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பாலம் பழுது நீக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.

காவல்துறை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு, இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்தது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, காவல்துறை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு, இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்தது
இதுவரை சுமார் 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இதுவரை சுமார் 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
பாலத்தின் சீரமைப்புப் பணிகள் கடந்த வாரம் நடந்ததால், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாக உள்ளூர் அமைச்சர் ஒருவர் கூறினார்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பாலத்தின் சீரமைப்புப் பணிகள் கடந்த வாரம் நடந்ததால், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாக உள்ளூர் அமைச்சர் ஒருவர் கூறினார்
பலியானவர்களில் கிட்டத்தட்ட 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பலியானவர்களில் கிட்டத்தட்ட 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்
உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி திங்கட்கிழமையும் தொடர்ந்தது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி திங்கட்கிழமையும் தொடர்ந்தது
குஜராத்திலுள்ள மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்திலுள்ள மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்
மீட்புப் பணி மச்சு நதியில் இரவு முழுவதும் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீட்புப் பணி மச்சு நதியில் இரவு முழுவதும் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் முதல்வர், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் முதல்வர், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்
Banner
காணொளிக் குறிப்பு, குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: