பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர்: 'குற்றவாளிகளை மன்னிக்க மாட்டேன்' - கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி

- எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிரியந்த குமார கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆவேசமான ஒரு கும்பலால், அடித்துக் கொல்லப்பட்டார்.
பின்னர் அவரை கொலை செய்தவர்கள் சடலத்தை தீ வைத்து எரித்தனர்.
பிரியந்த 2012இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தர உத்தரவாத அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். பிறகு அவர் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்த நிலையில், பிரியந்த கொல்லப்பட்டதையடுத்து 1,00,000 டாலர் மதிப்புள்ள நிதியும் முதல் சம்பளமும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் இம்ரான் தெரிவித்தார்.

மேலும், ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பத்து வருட சம்பளத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த 1,00,000 டாலர் தொகையானது, சியால்கோட் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களால் திரட்டப்பட்டது.
இது குறித்து பிபிசி இலங்கையிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கான கௌரவ தூதர் யாசின் ஸோயா, சியால்கோட்டின் தொழிலதிபர்களுடைய முயற்சிகளையும் அதைச் செயல்படுத்த அரசு வழங்கிய ஆதரவையும் பாராட்டினார். பிரியந்த குமாரவுடைய பிள்ளைகளுக்கு அல்லாமா இக்பால் உதவித்தொகை பெற்றுத்தர முயல்வதாக அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் இலவச உயர்கல்வி பெற இலங்கை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ்கோ நிறுவனத்திற்கு பிரியந்த குமாரவின் பங்களிப்பு அபாரமானது என்று அவர் கூறினார்.
பிரியந்த 2012-இல் இணைந்தபோது, அந்நிறுவனத்தில் 250 ஊழியர்கள் இருந்தனர். ஆனால், அது பல ஆண்டுகளாக விரிவடைந்து, இப்போது சுமார் 1,000 பேர் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.
பிரியந்த குமாரவின் மற்றொரு சக ஊழியரான மாலிக் அட்னான் பிபிசியிடம் பேசியபோது, அவருடைய மனைவிக்கு முதல் சம்பளத்தை வழங்குவதற்காக குமாரவின் மனைவியை சியால்கோட்டுக்கு அழைக்க நிறுவனம் விரும்பியது. ஆனால், வெளியுறவுத் துறை அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், கராச்சியில் இன்னும் பணிபுரியும் குமாரவின் சகோதரர் தொழிற்சாலைக்கு வந்தார்.
பிரியந்த குமாரவைக் கொலை செய்ய முயன்ற கும்பலை எதிர்த்து நின்றதற்காக மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் விருது வழங்கினார். அவர் தனது உடலை கேடயம் போல காத்து குச்சிகள் மற்றும் தடியடிகளில் இருந்து பிரியந்த சிக்காமல் பாதுகாத்தார்.
இலங்கை குடிமகனைக் கொன்றதற்காக குறைந்தது 26 சந்தேக நபர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கணவரை கொன்றவர்களை மன்னிக்க மாட்டேன் - மனைவி உருக்கம்
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி குறித்து, பிரியந்த குமார தியவடனவின் மனைவி முதியன்சலாகே நிலுஷி திஸாநாயக்கவிடம் பிபிசி தமிழுக்காக ரஞ்சன் அருண் பிரசாத் பேசினார்.
தனது கணவர், தம்முடன் இருந்தவாறே தன்னையும், தனது குடும்பத்தையும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நிலுஷி கூறினார்.
தனது பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் தொடர்ந்தவாறு, அவர்களின் வாழ்க்கையை சிறப்புற செய்வதே தனது நோக்கம் என்றம் அவர் தெரிவித்தார்.
''எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அதனையே எதிர்காலத்தில் முன்னெடுப்பேன்" என அவர் கூறினார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால், நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, அந்த நாடு உதவி செய்ததை எண்ணி மகிழ்கின்றேன் என்றார்.

கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நபர்களுக்கு மனதளவில் மன்னிப்பு வழங்கக்கூடிய மனநிலைமை உங்களிடம் உள்ளதா? என்று கேட்டோம்.
''குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலைமையும், இன்னும் பல பிள்ளைகளுக்கு தமது தந்தையை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் அல்லவா? அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நிலுஷி வலியுறுத்தினார்.
என் கணவர் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன." என அவர் தெரிவித்தார்.
நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் தொழில் செய்வதற்கான எண்ணம் உள்ளதா? என்றபோது, நான் எதிர்நோக்கியுள் சுகயீன நிலைமை காரணமாக, தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அரசாங்கம் பணம் அனுப்பிய தகவல் தமக்கு வந்துள்ள அதே சமயம், அது இன்னும் தமது கைக்கு வந்து சேரவில்லை என்று நிலுஷி தெரிவித்தார்.
இலங்கையில் தொடர் விடுமுறை காணப்பட்டமையினால், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. அதனால், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பணம், ஓரிரு தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்படும் என தனக்கு வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் மனைவிக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் (இலங்கை ரூபா மதிப்பில் 2,02,53,740.00) நட்டஈடும், 1,667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா 3,37,629.85) முதல் மாத சம்பளமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது..
தனது கணவர் மன நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாகவே நிராகரிக்கிறார் நிலுஷி. எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு கிடையாது என அவர் கூறுகின்றார்.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு, இலங்கை அரசாங்கம் அண்மையில் ரூபா 25 லட்சத்தை வழங்கியது. தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
கும்பல் வன்முறைக்கு வழிவகுத்தது எது?
பாகிஸ்தானில் முகம்மது நபியின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை பிரியந்த கிழித்ததாக தியவதனகே ஒரு வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து வன்முறைகள் தொடங்கியதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.

பட மூலாதாரம், AFP
அந்த நேரத்தில் பிரியந்தவை காப்பாற்றும் முயற்சியில் அந்த இடத்திற்கு விரைந்த சக ஊழியர் ஒருவர், தியவதனகே கட்டடம் சுத்தம் செய்யப்படவிருந்ததால் சுவரொட்டிகளை மட்டுமே அகற்றியதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.
ஆனால், அந்த சக ஊழியரின் முயற்சி வீணடைந்தது போல பிரியந்தவை வன்முறை கும்பல் தாக்கி கொலை செய்து அவரது சடலத்தை எரித்தது. பிரியந்தவின் மனைவியும் தனது கணவருக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டை மறுத்தார்."என் கணவர் தொழிற்சாலையில் சுவரொட்டிகளைக் கிழித்ததாகக் கூறப்படும் செய்திகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர் ஒரு அப்பாவி மனிதர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்."பாகிஸ்தானின் வாழ்க்கை நிலைமைகளை அவர் மிகவும் அறிந்திருந்தார். அது ஒரு முஸ்லிம் நாடு. அவர் அங்கு என்ன செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார், அதனால்தான் அவர் பதினோரு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்," என்கிறார் நிலுஷி.
ஒரு வெள்ளிக்கிழமையன்று நடந்த கொடூரமான கொலையின் தீவிரம் - பாகிஸ்தானையே உலுக்கியது. பலரும் இதுபோன்ற வன்முறை கும்பல் செயல்களைக் கண்டித்து போராட்டங்களிலும் அமைதிக் கூட்டங்களையும் நடத்தினார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பிரதமர் இம்ரான் கான், "இது ஒரு பயங்கரமான கும்பல் தாக்குதல்" என கண்டித்ததோடு, "சட்டத்தின் முழுக்கடுமையுடன் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்தார்.
என்ன குற்றம்?நிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது கடவுளைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதாக வரையறுக்கப்படுகிறது. பாகிஸ்தானில், இஸ்லாத்தை அவமதிக்கும் எவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.நாட்டின் மத நிந்தனைச் சட்டம், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பது, சவக்குழுகளில் அத்துமீறி நுழைவது, மத நம்பிக்கைகளை அவமதிப்பது அல்லது வழிபாட்டுக்குரிய இடத்தையோ வழிபாட்டுக்குரிய பொருளையோ வேண்டுமென்றே அழிப்பது அல்லது அசுத்தப்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்கிறது.இஸ்லாமியர்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறுவது கூட இந்த சட்டப்படி குற்றமாகும் - 1982இல், முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை "வேண்டுமென்றே" இழிவுபடுத்தியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டது.1986ஆம் ஆண்டில், முகம்மது நபிக்கு எதிரான கருத்து வெளியிடுவோரைத் தண்டிக்க இந்த சட்டத்தில் தனியாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு "மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை" பரிந்துரைக்கப்பட்டது.பாகிஸ்தானில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் கூட அது குறித்து தீர விசாரிக்காமல் போராட்டங்கள் மற்றும் கும்பல் வன்முறையைத் தூண்டும் செயல்பாடுகள் தூண்டப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அதிகமாக அங்கு வாழும் சிறுபான்மையினரே இலக்காகிறார்கள் என்று மனித உரிமை விமர்சகர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்கு: நோக்கம் நிறைவேறியதா?
- பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை
- நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு மாற்றங்களைக் கொண்டுவருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












