இலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர்

பட மூலாதாரம், AFP
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்தது. இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
"எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி முடிந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான்" என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பட மூலாதாரம், PAULA BRONSTEIN
இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
70 முதல் 80 சதவீத வாக்குகள்
இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளிலும் 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாத்தறை - 80 வீதம்
ஹம்பாந்தோட்டை - 80 வீதம்
திருகோணமலை - 83 வீதம்
இரத்தினபுரி - 84 வீதம்
வவுனியா - 75 வீதம்
மன்னார் - 71 வீதம்
யாழ்ப்பாணம் - 66 வீதம்
மட்டக்களப்பு - 77 வீதம்
முல்லைத்தீவு − 76 வீதம்
நுவரெலியா - 80 வீதம்
களுத்துறை - 80 வீதம்
குருநாகல் - 70 வீதம்
காலி - 80 வீதம்
கேகாலை - 79 வீதம்
மொனராகலை - 84 வீதம்
கிளிநொச்சி - 73 வீதம்
புத்தளம் - 75 வீதம்
அநுராதபுரம் - 80 வீதம்
கண்டி - 80 வீதம்
பொலன்னறுவை - 80 வீதம்
கம்பஹா - 81 வீதம்
கொழும்பு - 75 வீதம்
மாத்தளை - 75 வீதம்
திகாமடுல்ல (அம்பாறை) - 80 வீதம்
பதுளை - 80 வீதம்
இறுதிக்கட்டத்தை எட்டியது தபால் வாக்குகள் எண்ணும் பணி
தபால் வாக்கெண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற தேர்தல் முடிவுகள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மழை - தேர்தல் முடிவுகள் தாமதமாகும் சாத்தியம்நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க சில மணிநேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதன்படி, பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழையுடனான வானிலை நிலவும் அதேவேளை, சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் முடிவுகளை அறிவிக்க சில பகுதிகளில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ரத்னஜீவன் ஊல் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












