இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை

அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர இறக்குமதிக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்தி செய்யும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிய வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

எனவே, நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் துரித திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறை படுத்தவுள்ளதாக கூறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதனை வெற்றிபெற செய்ய சகல அரச அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, ரோஹிஞ்சா குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :