இலங்கை: அனுமதியின்றி யானைக்குட்டி வைத்திருந்த முன்னாள் எம்.பி. மீது விசாரணைக்கு அனுமதி
தகுந்த அனுமதிப் பத்திரமின்றி யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு அக்டோபர் மாதம் 24 ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படுமென்று உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சாட்சியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அனுமதிப் பத்திரமின்றி யானை குட்டியொன்றை தனது பவுத்த விஹாரயில் வைத்திருந்ததன் மூலம் உடுவே தம்மாலோக தேரர் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றமொன்றை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள தம்மாலோக தேரர் இந்த யானைக்குட்டி தனக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பவுத்த பெரஹர நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டியை சிலர் தனது விகாரையில் கைவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தான் அந்த யானைக்குட்டியை பராமரித்து வந்ததாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ளதாகவும் தம்மாலோக்க தேரர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- நான்கு மாதத்திற்குப் பிறகு மே 17 அமைப்பினர் விடுதலை
- 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை
- அக்டோபர் 25-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்
- கொழும்பில் மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் திறந்து வைக்க எதிர்ப்பு
- குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பாய்வதை தடுப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












