18 எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை
தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் 18 பேரை கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மறு உத்தரவு வரும்வரை அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை அக்டோபர் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிபதி துரைசாமி, தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு சபாநாயகர், சட்டபேரவை கொறடா மற்றும் முதல்வர் பதில் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ''சபாநாயகர் தனபால் தினகரன் அதரவு எம்எல்ஏகளை தகுதிநீக்கம் செய்தது நீதிக்கு எதிரானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஸ்யந்த் தவே தெரிவித்தார். அவர்களின் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கும் நிலை உள்ளது என்றார். அவர்கள் கட்சிக்கு எதிராக எந்தவிதத்திலும் செயல்படவில்லை என்று குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதிப்பதாகக் கூறினார்,'' என்றார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு ஆட்சியில் இருப்பதாகக் கூறி சட்டபேரவையில் உடனடியாக அதிமுக அரசு தங்களது பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபில் வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்
- இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி
- எல்லை மீறினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப்
- ரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி
- பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்
- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








