இலங்கை: மாகாண சபை தேர்தல்களில் 30% பெண்கள் கட்டாயம்
மாகாண சபைத் தேர்தல்களுக்காக சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 30% பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்ற சட்ட திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் அமைப்பாளரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரிஎல்ல கருத்து தெரிவித்தபோது அரசு நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்தத் திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இலங்கை அரசியல் சாசனம் மீறப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களை கோரி விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தது.
அந்த விண்ணப்பத்திண் மீது தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்திருத்தத்தால் அரசியல் சாசன மீறல் எதுவும் இல்லையென்று கூறியுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








