படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

Raft

பட மூலாதாரம், Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் மூன்றாம் பகுதி இது.

புதிர் மூன்று

இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு நதியை கடக்க விரும்புகின்றனர். படகு ஒன்றை செய்கின்றனர். ஆனால், அதில் ஒரு மனிதரும் அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே செல்ல முடியும்.

நான்கு பேரையும் அக்கரையில் சேர்பதற்கு குறைந்தபட்சமாக படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்?

காணொளிக் குறிப்பு, உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்...

விடை:

குறைந்த பட்சமாக 9 முறை. நீங்கள் வேறு விதமாக விடையை கண்டுபிடித்திருக்கலாம். (முதலில், அவர்கள் பக்கமாக இருக்கும் கரையில் இருப்பதாகவும், தூரமாக இருக்கும் கரையை கடக்க விரும்புவதாகவும் நினைத்துக் கொள்வோம்.)

ஒரு பெரியவர் நதியை கடக்க முயன்றால் அடுத்த கரையிலிருந்து அந்த படகை திரும்பக் கொண்டுவர, அங்கு ஒரு குழந்தை காத்திருக்க வேண்டும். எனவே தூரமாக இருக்கும் கரையை இரண்டு சிறியவர்கள் கடந்தால்தான் முடியும். அப்படி கடக்கும்பட்சத்தில் ஒருவர் படகை மீண்டும் கொண்டு வர முடியும்.

மூன்றாவது முறையில் முதல் பெரியவர், தொலைதூர கரையை கடப்பார். நான்காவது முறையில் தொலைதூர கரையில் காத்திருக்கும் குழந்தை படகை அருகாமை கரைக்கு எடுத்து வரும்; எனவே நான்கு முறை கடந்த பிறகு ஒரு பெரியவர் அருகாமை கரையிலும், ஒரு பெரியவர் தொலைதூர கரையிலும் இருப்பார்.

இதே நடைமுறை தொடர்ந்தால் எட்டாவது முறையாக படகு கடந்த பிறகு தொலைதூர கரையில் இரண்டு பெரியவர்கள் இருப்பார்கள். ஒன்பதாவது முறையாக இரண்டு குழந்தைகள் அந்த படகில் சென்றுவிடுவர்.

இந்த புதிர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் என்ஆர்ஐசிஎச்திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இதற்கு முந்தைய புதிர்களை பார்க்க

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :