போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் முதல் பகுதி இது.
புதிர் - 1
நீங்கள் ஏழு தங்கக் கட்டிகளை வைத்துள்ளீர்கள். அதில் ஒன்று போலியானது; மற்றவற்றைவிட எடை குறைவானதும் கூட. உங்களிடம் தராசு ஒன்று உள்ளது; ஆனால் அதை இருமுறைதான் பயன்படுத்த முடியும்.
போலியான தங்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?

விடை:
மூன்று தங்கக் கட்டிகளை தராசின் இரண்டு பக்கத்திலும் வையுங்கள்.
அவை சமமாக இருந்தால், நீங்கள் தராசில் வைக்காத தங்கக்கட்டி போலி.
இல்லையேல், தராசில் எடை குறைவாக இருக்கும் மூன்று தங்கக்கட்டிகளை எடுங்கள்.
அதில் இரண்டு தங்கக்கட்டிகளை எடுத்து தராசில் வையுங்கள்.
அது சமநிலைக்கு வந்தால் நீங்கள் வைக்காத தங்கக்கட்டி போலியானது
இல்லையேல் தராசில் எதன் எடை குறைவாக உள்ளதோ அதுதான் போலியானது.
இந்த புதிர், ஸ்பெக்டரம் சீக்ரெட் முகமை நுழைவுத் தேர்விலிருந்து எடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













