இலங்கை இயற்கை பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 208ஆக உயர்வு

இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

துண்டிக்கப்பட்ட பாதையில் செல்லும் பௌத்த துறவிகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த இயற்கை பேரிடரினால் காணாமல் போயுள்ள 92 பேரைத் தேடும் பணி தொடர்வதாக பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக இதுவரையில் ஆறு இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளபெருக்கு பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே மேல், மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மேலும் சில நாட்களுக்கு அவ்வப்போது மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

மழைக்கு பிறகான காலப்பகுதியில் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

காணொளி: இலங்கை மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

காணொளிக் குறிப்பு, இலங்கை மழையில் உயிர்ழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

மேலதிக தகவல்களுக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்