ஐபிஎல் 2021: CSK Vs MI மோதலுடன் மீண்டும் தொடங்கும் போட்டிகள் - தமிழ்நாட்டின் நடராஜன் விளையாடுகிறாரா?

மும்பை vs சென்னை

பட மூலாதாரம், IPL 2021

படக்குறிப்பு, மும்பை vs சென்னை

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. ஆட்டம் வேகமெடுத்து சென்று கொண்டிருந்த போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக பல வீரர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

திட்டமிடப்பட்டிருந்த 60 லீக் போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. மீதமுள்ள போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. பல்வேறு ஆலோசனைகளுக்கு பின், ஐக்கிய அரபு எமிரேட்டில் மீதி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஐபிஎல் 2021 சீசனுக்கான மீதி போட்டிகள் நாளை (செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி) முதல் தொடங்கப்படவிருக்கின்றன. அக்டோபர் 8ஆம் தேதிவரை லீக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

ஐபிஎல் 2021 மீத போட்டிகள் அட்டவணை

பட மூலாதாரம், IPL 2021

படக்குறிப்பு, ஐபிஎல் 2021 மீதி போட்டிகளுக்கான அட்டவணை

அக்டோபர் 10, 11, 13 ஆகிய தேதிகளில் குவாலிஃபயர் போட்டிகளும், அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கம், ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கம், சயீத் கிரிக்கெட் விளையாட்டரங்கம் - அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில்தான் எல்லா போட்டிகளும் நடத்தப்படவிருக்கின்றன.

கொரோனா விதிமுறைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவரென ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

வழக்கம் போல ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் காணலாம்.

முன்னணியில் டெல்லி மற்றும் சென்னை:

நடராஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடராஜன்

இதுவரை நடந்த போட்டிகளில், புள்ளிப் பட்டியலில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 போட்டிகளில் 6-ல் வென்று முதலிடத்தில் உள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 7-ல் 5 போட்டிகளில் வென்று புள்ளி அடிப்படையில் இரண்டாமிடத்திலும், விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 7-ல் 5 வென்று புள்ளி அடிப்படையில் மூன்றாவது இடத்திலும், ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் 7-ல் 4 போட்டிகளில் வென்று நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

தொடக்கத்தில் டேவிட் வார்னர் தலைமையில் விலையாடத் தொடங்கிய சன் ரைசர்ஸ் அணிக்கு கேன் வில்லியம்சன் தலைவராக மாற்றப்பட்டார். அந்த அணி ஏழு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வென்று கடைசி இடத்தில் இருக்கிறது.

வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் சென்று சேர்ந்திருப்பதாகவும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள்படி தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல பல்வேறு வீரர்கள் ஐபிஎல் போட்டிக்காக வலை பயிற்சி மேற்கொள்ளும் படங்களையும் இணையத்தில் பார்க்க முடிகிறது.

முதல் போட்டியிலேயே பரம வைரிகளாக கருதப்படும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸும், ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸும் மோதவிருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்த 2021 சீசனிலேயே சென்னை மற்றும் மும்பை மோதிய முதல் போட்டியில் சென்னை இலக்கு வைத்த 219 ரன்களை அடித்து போட்டியை மும்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அணிகளில் காயம் காரணமாக பல வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர் பெங்களூரு அணியில் ஆடம் சாம்பா, டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஃபின் ஆலன் ஆகியோர் காயம் காரணமாகவோ வேறு சில காரணங்களுக்காகவோ மாற்றப்பட்டதாக ஐபிஎல் வலைதளத்தில் செய்திகளைக் காண முடிந்தது.

அதே போல சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்சர் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோரும், கே எல் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ரிலே மெரிடெத், ஜை ரிச்சர்ட்சன், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் சில சர்வதேச போட்டிகளுக்குப் பிறகு காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அக்டோபர் 15ஆம் தேதி ஐபிஎல் 2021 இறுதிப் போட்டி நிறைவடைந்த அடுத்த சில நாட்களிலேயே ஐசிசியின் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :