ஐபிஎல் 2021 ஏலம்: சிஎஸ்கே - தோனியால் தமிழக அணி வீரர்கள் புறக்கணிப்பா?

சிஎஸ்கே

பட மூலாதாரம், CSK TWITTER

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு இதுவரை யாரும் ஏலம் போனதில்லை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு வாங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் வசம் இருந்த ஸ்டீவ் ஸ்மித் இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 2.2 கோடி அளவில் ஏலம் போனார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இதேவேளை வங்கதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 3.20 கோடிக்கு வாங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய ஆல் ரவுண்டரான ஷிவம் துவேயை ரூ. 4.40 கோடி அளவுக்கு வாங்கியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அதிகபட்ச ஏலத்துக்கு போன கிறிஸ் மோரிஸ், கெளன் மேக்ஸ் வரிசையில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. நாதன் கூல்ட்டரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 5 கோடிக்கும் பியூஸ் சாவ்லாவை ரூ. 2.40 கோடிக்கும் வாங்கியது.

அன்கேப்ட் வீரர்கள் பட்டியலில் இருந்த கிருஷ்ணப்பா கெளதமை ரூ. 9.25 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. ஷாரூக் கான் என்ற வீரரை ரூ. 5.25 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சேத்தன் சகார்த்யா என்ற வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1.20 கோடிக்கும் வாங்கின.

உமேஷ் யாதவ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ. 1 கோடிக்கு ஏலம் போனார். ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங்கை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. கேதார் ஜாதவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இதேவேளை, அன்கேப்ட் வீரர் பட்டியலில் இருந்த ரிலே மெரடித்தை ரூ. 8 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.

தமிழக அணி வீரர்கள் புறக்கணிப்பா?

சிஎஸ்கே

பட மூலாதாரம், CSK twitter

தமிழ்நாடு அணியில் 2014ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஷாரூக் கான் இருந்து வந்தார். அவரை தக்க வைக்க சிஎஸ்கே அணி முயற்சிக்கவில்லை. அவரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருக்கிறது.

இதேபோல, சிஎஸ்கே அணியில் இருந்த லெக் ஸ்பின்னரான பியூஷ் சால்வாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருக்கிறது.

தற்போது தமிழ்நாடு அணியில் சாய் கிஷோர், என். ஜெகதீசன் உள்ளபோதும் அவர்களை அணியில் சேர்க்க சிஎஸ்கே அணியோ அதன் கேப்டன் தோனியோ ஆர்வம் காட்டவில்லை என தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடக பக்கங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை இந்தியன்ஸ்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக இந்த போட்டியில் களமாடுகிறார். அவரை அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதேபோல வெங்கடேஷ் ஐயரை அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு கேகேஆர் அணி வாங்கியது.

பகத் வர்மா, ஹரி சங்கர் உள்ளிட்டோர் சிஎஸ்கேவுக்கு ஏலத்தில் கிடைத்த புதிய வரவு வீரர்கள்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: