காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஐந்து பதக்கங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்-இல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த மெஹுலி கோஷ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
முன்னதாக இந்தியாவின் ஜித்து ராய், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 235.1 புள்ளிகளை பெற்று ஜித்து முதல் இடத்தை பிடித்தார்.
ஜித்து குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள:நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை
இந்தியாவின் ஓம் மித்தர்வால் 214.3புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்தியாவை சேர்ந்த பிரதீப் சிங் 105 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், TWITTER-IOA
பிரதீப் சிங்கின் இந்த பதக்கத்துடன் சேர்த்து 8 பதக்கங்களை பளு தூக்குதல் பிரிவில் இந்தியா பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












