ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய யூ டியூப் சேனல்
அரசியல் அறிவிப்புக்கு பின் கட்சி தொடங்கும் வேலைகளில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார். அந்த வகையில் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளை நியமித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவரது செய்திகள் இடம் பெறும். முதல் கட்டமாக ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு இடம்பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் அன்றைய தினமே தன் கட்சியில் இணைய விரும்புவோரை இணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் செயலி ஒன்றை தொடங்கினார்.
அதில் பலர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர். செயலி தொடங்கி மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று இந்த செயலியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பட்டியல் மற்றும் உறுப்பினராக சேரவிரும்புவோர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








