கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி: மியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை

பட மூலாதாரம், Getty Images
பரபரப்பான கிரிக்கெட் ஆட்டம். ஒரு பந்து மீதமுள்ளது. வெற்றிபெறுவதற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதுதான் அந்த ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாக அமையும்.
இத்தகைய பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் அடித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தவர்கள் பட்டியல் குறித்து அலசுகிறார் பிபிசி செய்தியாளர் ஹிருதய விஹாரி. முதலில் ஒருநாள் போட்டிகள்.
ஜாவிட் மியான்டட்
1986-ம் ஆண்டு ஆஸ்திரேலிய-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
இறுதிபோட்டி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டியாக அந்த போட்டி அமைந்தது,
பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாவிட் மியான்டட் களத்தில் ஆடிக்கொண்டிருந்தார். இந்திய பந்து வீச்சாளரான சேட்டன் சர்மா பந்து வீசி கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், MIKE HEWITT
கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த அந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.
கடைசி பந்தில் ஜாவிட் மியான்டட் சிக்ஸர் அடிக்க, பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்தது.
சிவ்நாராயண் சந்தர்பால்
2008ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி குயின்ஸ் பூங்கா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டன. சிவ்நாராயண் சந்தர்பால்மட்டை பிடித்து ஆடிக்கொண்டிருந்தார். இலங்கையின் சமிந்த வாஸ் பந்து வீசினார்.
அந்த கடைசி தருணத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் திரில் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர்.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தன்னுடைய அணிக்கு வெற்றிக்கனியை ஈட்டி தந்தார் சிவ்நாராயண் சந்தர்பால்.
மெக்கல்லம்
2013ம் ஆண்டு இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, மழை குறுக்கிட்டதால், 23 ஓவர்களில் நியூசிலாந்து 198 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மெக்கல்லம் மட்டை பிடித்து ஆடிக் கொண்டிருந்தார். முந்தைய 4 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சிறப்பாக அவர் ஆடிக்கொண்டிருந்தார்.
கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதனை சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் மெக்கல்லம்.
லான்ஸ் குளூஸ்னர்
1999-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது.
நாஷ் வீசிய பந்தை சிக்ஸராக மாற்றி தனது அணியை வெற்றி பெற வைத்தார் லான்ஸ் குளூஸ்னர்.
பிரண்டன் டெய்லர்
2006-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற தேவையான ரன்கள் 5.
ஆனால், சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் பிரண்டன் டெய்லர்.
டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images
1, 2010-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இலங்கையின் சமர கபுகேதாரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
2. 2012-ஆம் ஆண்டில் இந்தியா -இங்கிலாந்து போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தவர் இயான் மோர்கன்.
3. 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்த பரபரப்பான போட்டியில் ஓவரின் ஆறாவது மற்றும் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை தேடித்தந்தார் பாகிஸ்தானின் பாபர்.
4. 2014-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான சிக்ஸரை அடித்தவர் ஜிம்பாப்வே அணியின் சிபாண்டா.
5. மார்ச் 18-ஆம் தேதியன்று நடந்த நிதாகஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் விளாசிய சிக்ஸர் இந்தியாவுக்கு ஆட்டத்தில் வெற்றியையும், கோப்பையையும் பெற்றுத்தந்தது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












