மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் - யார் இவர்?

யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?

பட மூலாதாரம், AFP

இன்று பிசிசிஐ அறிவித்துள்ள மேற்கிந்திய தீவுகளுக்கான டி20 அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார்.

முன்னதாக இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் 18 வயது ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர்.

அவரைப்பற்றிய சில தகவல்கள்

  • சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் இடக்கை பேட்ஸ்மேன் மற்றும் வலக்கை சுழற்பந்து வீச்சாளர்
  • இவர் விளையாடிய அணிகள்: இந்திய அணி, இந்தியா- U19, ஐபிஎல்- புனே அணி, தமிழ்நாடு மாநில அணி (ரஞ்சி, துலிப்), டி.என்.பி.எல்- தூத்துக்குடி
  • இவரது தந்தை சுந்தருக்கு சிறுவயதில் வழிகாட்டியாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் பி.டி. வாஷிங்டன் நினைவாக இவருக்கு பெயர் வைக்கப்பட்டது.
  • கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் புனே அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?

பட மூலாதாரம், Getty Images

  • முதல்தரப் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 31.29; பந்துவீச்சு சராசரி 26.93
  • நிதாகஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் எடுத்த 8 விக்கெட்டுகள் அவருக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: