வெனிஸ்: இந்த மிதக்கும் நகரத்தில் பொதுவெளியில் காபி குடித்தால் 73,000 ரூபாய் அபராதம் - ஏன் தெரியுமா?

காபி

பட மூலாதாரம், Getty Images

வெனிஸ் நகரின் ரியால்டோ பாலத்தில் அமர்ந்து, காபி தயாரித்துக்கொண்டிருந்த இரு பயணிகளுக்கு, வெனிஸ் அரசு 73,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது அந்நாடு. வெனிஸிலுள்ள நான்கு கிராண்ட் கால்வாய்களில் மிகவும் பழமையானது ரியால்டோ.

32 மற்றும் 35 வயதாகும் இந்த ஜெர்மனியை பயணிகள், தாங்கள் வைத்திருந்த, பயணிகளுக்காக காபி கலண்களில், காபி தயாரித்துக்கொண்டு இருந்ததை, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் பார்த்துவிட்டு காவல்துறையினரிடம் கூறியதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய வெனிஸ் மேயர் லுயிகி புருக்நாரோ, `வெனிஸை மக்கள் மதிக்க வேண்டும். இங்கு வந்து, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்களை செய்வோர் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்த செயலை காவல்துறையிடம் சுட்டிக்காட்டிய உள்ளூர்வாசிகளுக்கு நன்றி. பயணிகள் இருவருக்கும், அபராதம் விதிக்கப்பட்டு, வெனிஸிலிருந்து வெளியேற்றப்படுவர்` என்று தெரிவித்தார்.

வெனிஸில் விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்கள், அவர்களின் தாய்நாட்டு தூதரகத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுகிறது.

சுற்றுச்சூழல்

வெனிஸ் நகரம் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது. அந்த நகரம் அடிக்கடி வெள்ளத்தை எதிர் கொண்டு வருகிறது.

வெனிஸ்: இந்த மிதக்கும் நகரத்தில் பொதுவெளியில் காபி குடித்தால் 73,000 அபராதம் - ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

அதிகளவில் சுற்றலா பயணிகள் வருவதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதால் சூழலியல் மாசு ஏற்படுவதாக அம்மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆண்டுதோறும் 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வெனிஸிற்கு வருகிறார்கள்.

சமீபத்தில்,பொது இடங்களின் பயன்பாட்டில் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. மேல்சட்டை இல்லாமல் பொது இடங்களில் பயணிக்கக்கூடாது, குறிப்பிட்ட சில இடங்களுக்கு சுற்றுலா செல்லக்கூடாது ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கடந்த டிசம்பர் மாதம், குறைந்த நாட்களுக்கு வெனிஸில் சுற்றுலாவிற்கு வரும் மக்களுக்கு, நுழைவுக்கட்டணம் என்ற முறையில் 10யூரோ கூடுதலாக வசூலிப்பதற்கான உத்தரவையும் வெனிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :