குஜராத்தில் வெற்றி, இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் தோல்வி - பிரதமர் நரேந்திர மோதி என்ன சொல்கிறார்?

குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு

இந்த அனிமேஷனை பார்வையிட ஜாவா ஸ்கிரிப்ட் வசதியுடைய உலாவி (ப்ரெளசர்), நிலையான இன்டர்நெட் சேவை அவசியம்.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆட்சியமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்று அம்மாநிலத்தில் ஏழாவது முறையாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இதற்கு முன்பு இத்தகைய ஏழு முறை தொடர் ஆட்சி சாதனை மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரி முன்னணி ஆட்சியில் இருந்தபோது நடந்தது.

இம்மாத தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் 17 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஐந்து இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர். சில இடங்களுக்கான அதிகாரபூர்வ முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், பெரும்பான்மை பலத்துக்கு தேவையான தொகுதிகளை விட அதிக இடங்களில் பாஜக வென்றதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் குஜராத் மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்கள்.

பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் வரலாற்றுபூர்வ வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோதியின் புகழ் மற்றும் நம்பகத்தன்மையே காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி, மோதி அரசின் வளர்ச்சி மாடலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

குஜராத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "குஜராத்தில் இது ஒரு உண்மையான வரலாற்றுபூர்வ வெற்றியாகும். சுதந்திரத்திற்குப் பிறகு குஜராத்தில் முதல் முறையாக எந்தவொரு அரசாங்கமும் இத்தகைய சாதனையை இதற்கு முன்பு பெற்றது இல்லை," என்று கூறினார்.

குஜராத்தில் அனைத்து பின்னணியைக் கொண்ட எல்லா தரப்பு மக்கள், அனைத்து ஜாதி, மதத்தினர் திரளாக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இளைஞர்களின் வாக்குகள் பாஜகவுக்கு வந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கான உதாரணம் இது," என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா, "சுதந்திர இந்தியாவில் இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்து இந்த வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோதியின் தலைமையில் இன்று ஒரு வரலாற்று படைக்கப்பட்டிருக்கிறது," என்று தெரிவித்தார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்தி மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலையீட்டால்தான் தங்களுடைய வாக்கு வங்கி பிரிந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அதே சமயம், அங்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தில் மக்களின் நம்பிக்கையை பெற காங்கிரஸ் கட்சி இனி வரும் காலங்களில் கடுமையாக உழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு 40 லட்சம் பேர் வாக்களித்திருப்பதாக அதன் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி கூறியுள்ளார்.

"மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் மக்களுக்காக உழைப்போம்" என்று காத்வி தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

குஜராத் முதல்வரும், கட்லோடியா தொகுதி பாஜக வேட்பாளருமான பூபேந்திர படேல் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது தலைமையில் புதிய அரசு வரும் 12ஆம் தேதி பதவியேற்கும் என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

இமாச்சலத்தில் ஆட்சியை பறிகொடுத்த பாஜக

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறை ஆட்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 இடங்களில் ஆளும் பாஜக 25 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பல்ததுடன் ஆட்சியமைக்க தகுதி பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் மூன்று சுயேச்சைகளும் வென்றுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில், 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு ஆளும் கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்த வரலாறு கிடையாது. அந்தக் கூற்று இம்முறை நடந்த தேர்தலிலும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த மாநிலத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 55 லட்சம் வாக்காளர்களில், 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் நவம்பர் 12ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்குரிமை செலுத்தியிருந்தனர். அங்கு மொத்தம் 412 வேட்பாளர்கள் தேர்தல் களம் கண்டனர்.

இந்த நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் உரையாற்றியபோது, வரலாற்றுபூர்வ சாதனையை விவரித்த நரேந்திர மோதி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை பறிகொடுத்திருந்தாலும் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மத்திய அரசு எல்லா வித ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் பெற்றவாக்குகளில் ஒரு சதவீதம் பின்தங்கியிருந்தாலும் கூட, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் 100 சதவீதம் பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் தொடர்பான ஒவ்வொரு பிரச்னையையும் நாங்கள் வலுவாகக் கையாள்வோம் என்று கூறிய அவர், அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் எந்தக் குறையும் ஏற்பட மத்திய அரசு அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டார்.

குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெய்ராம் தாக்கூர், செராஜ் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸின் சேத் ராமை விட 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியை இழந்தாலும், 57 வயதான தாக்கூர், ஆறாவது முறையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கையின் நிறைவாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பலத்தைப் பெற்ற உடனேயே தமது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் ஜெய்ராம் தாக்கூர். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமையே அவர் தமது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

மோர்பி பால விபத்து

பட மூலாதாரம், AFP

பிரியங்காவின் 10 அம்ச செயல்திட்டம்

இமாச்சலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவு செய்துள்ள ட்வீட்டில், "அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றிக்கான நல்வாழ்த்துக்களுக்குத் தகுதியானவை. பொதுமக்களுக்கு காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இதற்கிடையே, இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வரை அக்கட்சியின் மேலிடம் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.இந்த மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் 10 அம்ச செயல்திட்டம் வேலை செய்ததாகவும் அதே சமயம் குஜராத்தின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவும் பூபேஷ் பாகெல் கூறினார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பூபேஷ் பாகெல், சத்தீஸ்கர் முதல் அமை்ச்சர்

காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இமாச்சல பிரதேச தேர்தல் வெற்றிக்கு உதவியதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்க நன்றி தெரிவிப்பதாக கூறினார். வெற்றி பெற்ற சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களுடைய தலைவரைத் தேர்வு செய்த பிறகு கட்சியின் மேலிட பார்வையாளர் மூலம் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ்
Banner

குஜராத் தேர்தலின் ஐந்து படிப்பினைகள்

  • எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்தது பாஜகவுக்கு பெரிதும் உதவியுள்ளது. வழக்கமாக இரண்டு கட்சிகளுக்கு இடையே தேர்தல்கள் நடக்கும் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஓர் எதிர்க்கட்சியாக உருவானதால் இது ஓரளவுக்குச் சாத்தியமானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • ஆம் ஆத்மியின் உற்சாகமான பிரசாரம் இருந்தபோதிலும், வாக்குகளில் பாஜக தனது பங்கை இழக்கவில்லை எனத் தோன்றுகிறது. மாறாக, ஆம் ஆத்மி காங்கிரஸின் வாக்குகளை எடுத்துக்கொண்டு, 150 இடங்களுக்கும் மேல் பாஜக பெறுவதற்கு உதவியதாக அரசியல் விஞ்ஞானி அமித் தோலாகியா கூறுகிறார்.
  • இந்தத் தோல்வியிலிருந்து காங்கிரஸ் மீள்வது கடினம். 2027இல் அடுத்த தேர்தல் வரும்போது, மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காங்கிரஸில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு தலைவர்களும் ஆதவராளர்களும் மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
  • ஆம் ஆத்மியை பொறுத்தவரை, அதன் இறுதி வாக்குகள் குஜராத்தில் அதன் வருகையின் முழுமையான கதையைச் சொல்லும். மாநிலத்தில் ஆம் ஆத்மியின் முதல் வருகையில் இவ்வளவு பலன் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "இருப்பினும், அது எதிர்க்கட்சிக்கான ஓர் இடத்தை உருவாக்கியுள்ளது. இதை மேற்கொண்டு கட்டமைக்க வேண்டும். அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு மாநிலம் முழுவதும் பிரிவுகளை உருவாக்க வேண்டும். நம்பகமான தலைவர்களைக் கொண்டுவர வேண்டும்," என்கிறார் பேராசிரியர் தோலாகியா.
  • குஜராத்தில் பாஜகவுக்கு சவால் விட எதிர்க்கட்சிகள் நிறைய செய்ய வேண்டியிருக்கும். "இது ஏறக்குறைய ஒரு மேலாதிக்க கட்சியாகி விட்டது. அதை அகற்றுவது சாத்தியமற்றது. பாஜகவுடைய பிரபலத்தின் இரண்டு முக்கிய தூண்கள் இந்துத்துவா சித்தாந்தமும் மோதியின் தலைமையும். மோதி இல்லையென்றாலும், சித்தாந்தம் பாஜகவை தாங்கிப் பிடிக்கும். ஆனால் அவரது தலைமை கட்சியைப் பலப்படுத்துகிறது, மேம்படுத்துகிறது," என்கிறார் பேராசிரியர் தோலாகியா.
Banner

பின்னடைவைச் சந்தித்தும் மகிழ்ச்சியடையும் ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்தித்தும் மகிழ்ச்சி

பட மூலாதாரம், ANI

பாஜக குஜராத்திலும் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்திலும் வெற்றி பெற்ற நிலையில், அங்கு தேர்தல் தளம் கண்ட ஆம் ஆத்மி கட்சி அக்கட்சி மேலிடம் எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை.

டெல்லியிலும் பஞ்சாபிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் ஐந்து இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அக்கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: