பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை
படக்குறிப்பு, வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.தலா ஒரு மணி நேர சுற்றில் 30 வீரர்கள் என்கிற கணக்கில் மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் 729 காளைகள் போட்டியில் பங்கெடுத்தன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். நான்காவது சுற்றில் களத்துக்கு வந்த்து 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு, சிறந்த காளைக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டார். இவர் 11 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வானார்.

முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அவிழ்த்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, பிரபாகரன், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் - பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர்
ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, கார்த்திக் ராஜா, இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரர்

தமிழ்நாட்டையே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டுப் படங்கள் இதோ.

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை
படக்குறிப்பு, திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

பாலமேடு ஜல்லிக்கட்டில், தன் திமிலைப் பிடிக்கும் வீரர்களை எல்லாம், உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை.

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்
படக்குறிப்பு, போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்துவிட காத்திருக்கும் காளை மாட்டு உரிமையாளர்கள்.

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை
படக்குறிப்பு, ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

ஒருவரின் பிடியை உதறவிட்டு, மற்றொருவரின் பிடியிலிருந்து விடுபட துள்ளிக் குதிக்கும் வலிமையான காளை.

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்
படக்குறிப்பு, மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

வாடிவாசலிலிருந்து வெளி வந்த காலை மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடுகிறது. மறுபக்கம் காளைக்கு ஈடு கொடுத்து திமிலை அணைத்த படி ஒரு இளைஞரும் ஓடுகிறார்.

ஒரு காளை, ஒரு இளைஞர்
படக்குறிப்பு, ஒரு காளை, ஒரு இளைஞர்

ஒரு காளை, ஒரு இளைஞர், திமிலோடு மோதி விளையாடி ஜல்லிக்கட்டுப் போட்டியை சூடேற்றிய தருணம்.

காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்
படக்குறிப்பு, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்.

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை
படக்குறிப்பு, பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

வாடிவாசலில் இருந்து வந்தது தான் தெரியும், பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் அற்புக் காளை.

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை
படக்குறிப்பு, விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

பிடித்த பிடியை விடாத இளைஞர், பிடியை பிரிக்கும் நோக்கில் கண்ணில் வேகத்தோடு திமிறித் தெறித்தோடும் காளை.

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை
படக்குறிப்பு, வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

வாடிவாசலிலிருந்து புறப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை.

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்
படக்குறிப்பு, வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழி களம் கண்டு இளைஞர்களைத் தெறிக்க விட, தங்கள் உரிமையாளர்களோடு காத்திருந்த காளைகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: