கொரோனா வைரஸ்: குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழக்கும் சோகம்

பட மூலாதாரம், Getty Images
கிட்டதட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பணிக்காக குடிப்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல வருத்தம் தரக்கூடிய காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது. மாநிலங்களுக்கு இடையே ரயில்கள் மற்றும் பேருந்துகள் இல்லை என்பதால் அவர்கள் நடந்தே பல கிலோ மீட்டர் தூரங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு பல்வேறு சாலை விபத்துக்களில் தங்கள் பணிகளுக்காக வேற்று மாநிலங்களில் குடிபெயர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவால் பல்வேறு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் குடிபெயர்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று மக்களுக்கு இடையே பரவுவதை தடுப்பதற்கே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மேலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதாக இல்லை. பணிக்காக வேற்று மாநிலங்களில் குடிபெயர்ந்த பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிறுத்தங்களில் கூடினர்.

மார்ச் மாதம் 29ஆம் தேதி வரை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட மருத்துவ அவசர நிலை மற்றும் சாலை விபத்துக்களால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிவந்த பல ஊடக செய்திகள் குறித்து பிபிசி ஆய்வு மேற்கொண்டது. இதுவரை சாலை விபத்துகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர், நீண்ட தூரம் நடை பயணம் மேற்கொண்டதால் ஏற்பட்ட உடல் நல குறைவை சமாளிக்க முடியாமல், சிகிச்சையும் பெற முடியாமல் இருவர் உயிரிழந்துள்ளனர், இது தவிர வேறு சில சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் மார்ச் 24ம் தேதிக்கு பிறகு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி மார்ச் 27ம் தேதி ஹைதிராபாத்தின் பெட்ட கோல்கொண்டா அருகே பயணம் மேற்கொண்ட எட்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த மாநிலமான கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்தபோது தாங்கள் பயணம் மேற்கொண்ட வாகனத்தை லாரி மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இன்னும் இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் குஜராத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை அன்று, நான்கு தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு குஜராத்தில் இருந்து நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வேகமாக வந்த டெம்போ மோதி உயிரிழந்தனர். மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதே நாள் குஜராத்தின் வால்சாத் மாவட்டத்தில் உள்ள இரண்டு பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக செய்தி வெளிவந்துள்ளது. நாடு முடக்கப்பட்ட நிலையில், இருவரும் தங்களின் பனியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது ரயில் மோதி உயிரிழந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
மார்ச் 26ம் தேதி டெல்லியில் உணவு கொண்டு சென்று வீடுகளில் ஒப்படைக்கும் டெலிவரி பாயாக பணியாற்றிய ரன்வீர் சிங் தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு நடத்தே சென்றுள்ளார்.

அப்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ உதவியையும் பெற முடியாமல், ஆக்ராவில் உயிரிழந்தார்.
62 வயதான குஜராத்தின் சூரத்தை சேர்ந்த கங்காதரன் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். அப்போது மயக்கம் அடைந்த நிலையில், திரும்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த அனைத்து சம்பவங்களையும் குறைந்தது இரண்டு ஊடங்களின் தகவல்களை வைத்து உறுதி செய்கிறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












