இரண்டு கோடி இளைஞர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுப்பதாக மோதி அறிவித்தாரா? #BBCFactCheck

செய்தி

பட மூலாதாரம், Prashant Chahal

    • எழுதியவர், உண்மை சரிபார்ப்புக் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டு கோடி இளைஞர்களுக்கு கட்டணமில்லா மடிக்கணினிகளை (லேப்டாப்) வழங்குவதாக அறிவித்துள்ளார் என்கிற செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த செய்தி கீழ்கண்டவாறு உள்ளது.

"இரண்டாவது முறையாக பிரதமராகியுள்ள நிலையில், நரேந்திர மோதி, "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இரண்டு கோடி இளைஞர்களுக்கு கட்டணமில்லா மடிக்கணினி வழங்கபோவதாக அறிவித்துள்ளார். இதுவரை 30 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர் விண்ணப்பம் செய்ய வேண்டியது உங்களுடைய பணி. எவ்வளவு விரைவாக முடியுமே அவ்வளவு விரைவாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். http://modi-laptop.sarkaari-yojana.in/#"

சமூக ஊடக பயனாளர்கள் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பல்வேறு இணையதள இணைப்புகளில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.

வாட்ஸப்

பட மூலாதாரம், Prashant Chahal

100க்கு மேற்பட்ட வாட்சப் பயனர்கள், இந்த செய்தியின் உண்மை தன்மையை ஆராய எங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதிகமான பயனர்கள் "http://modi-laptop.sarkaari-yojana.in/#" என்கிற இணைப்பு பற்றி அவர்களின் வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இணைப்பை திறந்தவுடன், "பிரதமரின் கட்டணமில்லா மடிக்கணினி விநியோக திட்டம்" என ஒரு கணினியில் பிரதமர் புகைப்படத்தோடு எழுதியிருப்பதை பார்க்க முடிகிறது.

அதற்கு கீழே இறக்குமுக நேரங்காட்டியில், இந்த திட்டம் முடிவடைய எஞ்சியிருக்கும் நேரத்தை பார்க்க முடியும்.

இருப்பினும், இந்த செய்தி தவறானது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இத்தகைய திட்டம் பற்றி பாரதிய ஜனதா கட்சி எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கேள்வி

பட மூலாதாரம், Prashant Chahal

உண்மை என்ன?

நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்க இருப்பது பற்றி அறிவிக்கப்பட்ட மே மாதம் 23ம் தேதிக்கு பிறகு, சமூக ஊடகங்களில் இந்த செய்தி பகிரப்பட தொடங்கியுள்ளதை எமது ரிவர்ஸ் தேடலில் கண்டறிந்தோம்.

இந்த செய்தியும், அதில் வழங்கப்பட்டிருந்த பதிவு செய்வதற்கான இணைப்பைபோல நம்பதகாத ஒன்றாகும்.

இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி: http://modi-laptop.saarkari-yojna.in/# . இது பாதுகாக்கப்பட்ட இணையதள முகவரி கிடையாது.

இதே செய்தி பல்வேறு இணையதள இணைப்புகளிலும் பகிரப்பட்டுள்ளது: http://free-modi-laptop.lucky.al/# and http://modi-laptop.wishguruji.com/

http://modi-laptop.saarkari-yojna.in/# - இந்த இணைப்பை நாங்கள் மாதிரியாக எடுத்து கொண்டோம்.

மோதி

இந்த இணைப்பை திறந்தவுடன், "பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா" திட்டத்தின் லட்சனையையும் பார்க்க முடிகிறது.

இந்த வைரலான செய்தியில் குறிப்பிடப்பட்ட இணைப்பில் பதிவு செய்கிறபோது, பயனர்களின் பெயர், தொலைபேசி எண், வயது, மாநிலம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய கேட்கப்படுகிறது.

இந்த விவரங்களை சமர்பித்த பின்னர், இந்த இணைப்பு இரண்டு கேள்விகளுக்கு விடையளிக்க பயனர்களிடம் கேட்கிறது.

முதல் கேள்வி: "இந்த கணினி திட்டத்தை இதற்கு முன்னால் பயன்படுத்தி இருக்கிறீர்களா?"

இரண்டாவது கேள்வி: "உங்களுடைய நண்பர்களோடு இந்த செய்தியை பகிர்வீர்களா?"

இந்த கேள்விகளுக்கு "ஆம்" அல்லது "இல்லை" என எந்த விடை அளித்தாலும், வாட்ஸப்பிலுள்ள 10 குழுக்கள் அல்லது நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்வதற்கு கேட்கின்ற இணையதள பக்கத்திற்கு பயனர்களை இந்த இணைப்பு வழிநடத்தி செல்கிறது.

பின்னர். இந்த செய்தியில் வாக்குறுதி அளிக்கப்பட்டதைபோல, கட்டணமில்லா கணினியை பெறுவதற்கு யாருக்குமே உதவாத பதிவு எண் ஒன்றை இந்த இணையதளம் வழங்குகிறது.

மேலும், பல இலக்கணப் பிழைகளுடன் கூடிய சிறந்த மருத்துவ ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தந்திற்கான மூன்று ரகசியங்கள் பற்றிய தகவல்களை இந்த இணையதளத்தின் அடியில் எழுத்து வடிவில் பார்க்க முடிகிறது.

விளம்பரம்

பட மூலாதாரம், Prashant Chahal

பொது டொமைன்

இந்த பயனர்களுக்கு கட்டணமில்லா மடிக்கனிணிகள் கிடைக்காவிட்டால், சமூக ஊடகங்களில் இத்தகைய இணையதளங்களின் இணைப்புகளை பரப்புவதன் மூலம் யார் பயன் அடைவார்கள்?

இது பற்றி புரிந்துகொள்வதற்காக, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சைபர் பாதுகாப்பு நிபுணர் ராகுல் தியாகியிடம் நாங்கள் பேசினோம்.

இது பற்றி சற்று ஆய்வு நடத்திய பின்னர், "http://modi-laptop.saarkari-yojna.in/# என்ற பெயருடைய இந்த டெமைன் ஹரியானாவில் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி சுமார் 7 மணி அளவில் வாங்கப்பட்டு, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி புதுப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதி கட்டணமில்லா மடிக்கணினி வழங்குவதாக சொல்லும் இந்த இணையதளங்கள் அதிகாரபூர்வ அரசு இணையதளங்கள் அல்ல என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

மோதி

பட மூலாதாரம், pmindia.gov.in

இது பற்றி தியாகி கூறுகிறபோது, "இத்தகைய இணைதளங்களின் முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பதும், பெருமளவு தரவுகளை சேகரிப்பதுமே. பயனர்களின் பெயர், வயது, இடம், தொலைபேசி எண்கள் போன்ற அடிப்படை தகவல்களை இந்த இணையதளங்கள் சேகரிக்கின்றன. இந்த தகவல்களை வணிக நிறுவனங்களுக்கு இவை விற்கின்றன அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பியும், அதிக தகவல்களை கேட்டும் பயனர்களை பொறியில் சிக்க வைக்கின்றன" என்றார்.

மேலும், "தொலைபேசி எண்கள் போன்ற அடிப்படை எண்களை வழங்குவதற்கு மக்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், திட்டமிட்டு நடத்தப்படும் பெரிய குற்றங்களுக்கு இதுதான் முதல் படி. வழக்கமாக, தொலைபேசி எண்களை பெற்ற பின்னர், தீங்கான மால்வேர் செயலியை கொண்டிருக்கும் ஆப்-களை (App) பதிவிறக்கம் செய்ய குறுந்தகவல் அனுப்புகின்றனர் அல்லது அந்தரங்க உரிமை மீறல்களுக்கு வழிநடத்தும் வங்கி விவரங்கள் மற்றும் அரசு ஆவணங்களை கேட்கின்றனர்" என்று தியாகி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :