கிரிக்கெட்: மூன்றாவது ஒரு நாள் போட்டியையும், தொடரையும் வென்றது இந்தியா

கிரிக்கெட்

பட மூலாதாரம், Reuters

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

இந்தூரில் இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி, 47.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு ரோகித், ரஹானே ஜோடி நல்ல துவக்கத்தை கொடுத்தது. இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 139 ரன்கள் எடுத்தனர்.

கிரிக்கெட்:

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி சார்பில் ரஹானே 70 ரன்களும், ரோகித் சர்மா 71 ரன்களும், பாண்டியா 78 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :